வாடை

வாடை.
=====
தனியாக அலையும்
நத்தைக்கு
குருட்டு வீதிகளின் சாளரம்
காற்றைத் திறந்து
விட்டுக் கொண்டிருக்கிறது.

பிணச் சாம்பலின்
வாசனையுடன்
தென்றலொன்று
வீட்டு ஜன்னலுக்கால் புகுந்து
அகராதியை எரித்துப்
போகிறது.

கயிற்றில் காயப்போட்ட
சாரம் ஒன்று
தூரமான வான்வழி வந்த
வாடையுடன் உறவாடி
மீளவும் நீரில்
நீந்துகிறது.

நத்தைக்கு நான் போர்த்திய
ஈரச் சாரத்தை எடுத்த
வாடைக்காற்று
அகராதியின்
இறுதிப் பக்கங்களால்
தன்னையே வாசித்து
நகர்கிறது.

எங்களைப் போலத்தான்
எங்களைச் சார்ந்தவைகளும்.
என்ன ஒன்று நாங்கள்////
நீங்கள் மீதமாக நம்முடன்.....
====
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments

Popular Posts