நாம் இல்லாமல் இருக்கிறோம்.

எதைப்பற்றி எழுதலாம்
என்ற உந்துதலில் நடுவிரல்களில்
பேனா  பாய்ந்திருந்து தடுமாறும்
போதுதான் புரிகிறது..
நாம் எவ்வளவு
வெறுமையிலும்,
தயக்கத்திலும்,
தனிமையிலும்,
தடுமாற்றத்திலும்,
மொழிப்பஞ்சத்திலும்,
இருக்கிறோம் என்று...

கடைசியில் வேறு வழியின்றி
கவிதையைப் பற்றி மட்டுமே
எழுதிமுடிக்க வேண்டிய
கட்டாய நிலையில் தான்
நாம் இருக்கிறோம்......
==
## நாம் இல்லாமல் இருக்கிறோம்...
==
சுயாந்தன்.

Comments

Popular Posts