நான் விரும்பும் நதி.

நான் விரும்பும் நதி.
=======
நான் விரும்பும் நதியிடம் ஒரு கடலுண்டு.
நீளும் முகங்களுக்கு அங்கே ஒரு கரையில்லை.
நான் விரும்பும் நதியிடம் சிறு மணலுண்டு.
அங்கு கிளிஞ்சல்கள் நிலவிடம் இரவல் போயுள்ளன.
நான் விரும்பும் நதியிடம் பல கவிதைகளுண்டு.
இருந்த ஒரு கவிஞனும் களவு போயுள்ளான்.
நான் விரும்பிய நதியிடம் நூறு நிலவுண்டு.
ஒரேயொரு நட்சத்திரம் மலைகளுக்குள் ஒளிந்துள்ளது.
நான் விரும்பும் நதியிடம் ஒரு மலருண்டு.
அதன் வாசனைகள் யாவும் நதியிடம் கொட்டிக்கிடக்கின்றது.

நான் விரும்பும் நதியிடம் நான் உள்ளேன்.
நான் விரும்பும் நதியிடம் நாம் தான் இல்லை.
நான் விரும்பாத நான் இடம் நதியில்லை.
நான் விரும்பிய நாம் இடம்
நதியுண்டு.
நான் விரும்பிய நதி தரையிலில்லை.
நான் விரும்பும் நதி
கடலிலுண்டு.

நான் விரும்பிய நதியும்
நான் ஐ விரும்பாத நதியும்
நீ மட்டும் தான்.
கண்டீரோ!!!!
நாம் விரும்பும் நதி சில நேரங்களில் இப்படி நீ
என்றாகிப் போவதுமுண்டு....
==
By:: இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments

Popular Posts