பிணைந்திருத்தல் & தளர்வு நியதி.

கீற்று & திண்ணை ஆகிய இரு தமிழக இதழ்களில்  பிரசுரமாகியிருந்த எனது கவிதைகள்...
======
1. பிணைந்திருத்தல்..
===========
பிணைக்கப்பட்ட இரண்டு மாடுகளில்,
ஒன்று விஞ்ஞான மாடு.
மற்றையது நிலவின் கறை.

வயற்பச்சைகளை
அரைவாசி வேலிக்குள்ளால் துளாவிக்கொண்டு தின்ன முயற்சிக்கும் இந்த விஞ்ஞான மாடு அறிந்திராது,
அன்று பாய்ச்சப்பட்ட நீரில் விசமேறி நெற்கதிர் வரையிலும் சென்றதை.....

நிலாவின் கறைகொண்ட மாடு கட்டவிழ்க்க முயற்சித்தும் செத்துப்போன விஞ்ஞானத்தை விட்டு விலகாதிருக்க இன்னொரு சாவுக்கு நிலாவிடமே கவிதை கேட்கிறது...

என்ன செய்வது
பிணைப்புகள் விதிவிலக்காகாது என்று எனது கொள்ளுப் பாட்டி சொன்னதுண்டு......

=== கீற்று..

2. தளர்வு நியதி..
=====
கோணல் தனமாக
வளைந்து எரிகின்ற
ஊர்ப்பக்கத்துக் கோயில்
விளக்குகள்.
ஏன் எரிகின்றன?
யாதேனும் நேர்த்திகளா?
ஆகம நியதிகளா?

நூற்றாண்டின் துருப்பிடித்த நம்பிக்கைகள் கடந்தும்
அவைமட்டும் நிரந்தரமாகப் பற்றுகின்றன.

சில ஈக்களையும்
சில்வண்டுகளையும்
கொசுக்களையும்
பலி எடுத்தபடி.

ரத்தச் சிதறல்களால்
கற்கடவுளின் நைவேத்திய யாசகம் நிகழ்கிறது.

சம்வாதம் செய்ய ஒரு
சக கடவுள் எனக்கில்லை
என்ற வேட்கை மட்டும்தான்.

இங்ஙனமே அரிதார
புனரமைப்புக்கள் நிகழ்த்தி
மனிதன் கடவுள் நிலைக்கு வரக்கூடும்.

அதில் நான் மட்டும்
மனிதனாகவே விரும்புகிறேன்.

===== திண்ணை....

http://puthu.thinnai.com/?p=33876

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/31969-2016-12-05-01-19-49

Comments

Popular Posts