வெயில்கள்
1. வெயில்கள்.
========
மாயப்பொழுதுகளின் நகர்ந்திடாத வெயில் தருணங்கள்.
மழலைமொட்டுகளின்
மலர்ந்திடாத முது-மனப்
பொய்மைகள்.
சிலவேளைகளுக்காக
நியாயம் உதிர்த்திடும்
நமது அநியாயங்கள்.
இப்படிப் பல அத்தியாயங்கள்
நம்கூடவே வந்தாலும்,
நமக்கான பக்கங்களை மாயப்பொழுகள் கூட வாசிக்காமலே போய்விடுகின்றன.
எப்படியான தருணங்களை
இந்த வெயில்கள் விரும்புகின்றனவோ??
===
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.
====
Comments
Post a Comment