இரவுகள்
ஏன் சில இரவுகள் இரவுகளாக இருக்க மறுக்கின்றது.
ஒரு தெருவில் நாய் குரைக்கின்றது.
ஒரு சந்தியில் குடிபோதையில் சில ஆண்களின் சப்தம்.
ஒரு மதகில் விபத்துக்குள்ளான பைக்கின் நிசப்தம்.
ஒரு ஊரில் வெளிச்சத்தாலான இரவுகளின் ஓலம்.
இரவுகளால் ஆனது நினைவு.
இரவுகளால் ஆனது கனவு.
இரவுகளால் ஆனது பகல்.
இரவுகளால் ஆனது கவிதை.
இரவுகளால் ஆனது கண்ணீர்.
இரவுகளால் ஆனது காதல்.
இரவுகளால் ஆனது இரவு.
நிலவுக்கும் பனிக்குமான இடைவெளியில் பயணிக்கும் இந்த இரவை
என் விரல்களால் ஏன் விரிவாக்கவேண்டும். அல்லது ஸ்பரிசிக்க வேண்டும்.
தேநீரைப் பருகவா?.
வீதிக் கனப்பை அறியவா?.
Red Light காரிகளை நேசிக்கவா?.
அல்கஹாலின் கடைசிச் சொட்டைப் பருகவா?.
ஏன் இரவுகள் இரவாக இருப்பதில்லை.
Comments
Post a Comment