கடவுளின் சாகியம்

தூரமாய்க் கதறும்
கடவுளின் சாகியம்.
===========

கடல் காணும்
சாகியக் கனவுகளில்
பறவைகள் மிதக்கும் லாவகம்.
மீதமுள்ள அலைகளில்
மீன் வலைகளின் அரவணைப்பு.
திமிங்கலங்களின் கூட்டுச்சதியில் எச்சமாக;
'கடல் கொண்ட நிலமும்,
மணல் அள்ளும் கிளிஞ்சல்களும்'.

சமுத்திரதேவி பவளப் பாறைகளில் ஒளிந்திருந்து பாவம் போக்குவாள்.
கவிஞனின் பேனாக்கள் நீரோட்டங்கள் வழி வாழ்த்துரைகளை
எழுதி விசும்பும்....

காணாத தூரம் போன கடவுள் மீண்டும் உனக்குப்
புனர்ஜென்மம் தரவே
நீ ஆத்திகனாய்ச் சாவுகொள்.....
=====
==
By:: சுயாந்தன்.

Comments

Popular Posts