எனது சுவர்களின் மீது - மொழிபெயர்ப்புக் கவிதைகள்

என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மலையாளக் கவிதை ஒன்று:
இது மலையாள இலக்கிய உலகின் நவீனத்துவ வழிகாட்டி அய்யப்ப பணிக்கரால் படைக்கப்பட்டது. மலையாள மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, பின்னர் தமிழில் மொழியாக்கப்பட்டது.
(ஆங்கில வழிக் கவிதை என்று தான் கூறவேண்டும்)

எனது மொழிபெயர்ப்பில் தவறுகள் இருந்தால் விமர்சிக்கவும்....

Upon My Walls.....
=============
Look at the picture my hands have drawn on my walls:
why do you stare? Look carefully, you fool!
Nerves that stretch from the navel and the eyes
thirst and burn in the brain;
copper dreams blossoming on the dead volcano
blaze and flow around;
tears unfrozen, ears unstopped,
the veins keep glowing; is it creation or destruction?
'Look at the picture my hands have drawn on my walls;
why do you stare? Look carefully, you fool!'

எனது சுவர்களின் மீது......
=====================
என் சுவர்களின் மீது
எனது கைகளால் 
வரையப்பட்ட ஓவியம் அதோ!!
ஏ மூடனே!
வியப்படையாதே!
கவனமாகக் கவனி!

தொப்புளிலும், கண்களிலும் இருந்து நீட்டித்த நரம்புகள்
அறிவைத்
தாகமும், பசியும்
கொள்ள வைக்கின்றன....
அங்கே,
அழிவுற்ற எரிமலையின்
பெருந்தீ மீதும்,
சுற்றிப்பொங்கி வழிந்த ஜுவாலையின் மீதும்,
செப்புக்கனவுகள் மலர்கின்றன.

கண்ணீர்த் துளிகள் உருகி உடைந்து விழுகின்றன........
காதுகள் திறவுண்டு போகின்றன........
நரம்புகள் சிவத்துப் புடைத்தெழுகின்றன.......

இங்கு நிகழ்வது;
சிருஷ்டியின் தொடக்கமா?
இல்லை,
பேரழிவின் ஆரம்பமா?

''என் சுவர்களின் மீது
எனது கைகளால் 
வரையப்பட்ட ஓவியம் அதோ!!
ஏ... மூடனே
வியப்படையாதே!
கவனமாகக் கவனி!''

==============
=====
Walls, Copper, Volcano, Blaze என்று ஒரே Metaphysics  ஆக உள்ளது. பிரமிளின் E=MC2 கவிதை தான் ஞாபகம் வருகிறது.
"ஜன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி"

====
இ.சுயாந்தன்.

Comments

Popular Posts