நீதி Phenomenal அநீதி.
நீதி Phenomenal அநீதி.
==========
வானங்களுக்கு நடுவே
மின்னலால் வன்புணரப்பட்ட மேகங்கள்,
சமுத்திர நீதிபதியின் முன் ஆஜரானது.
சாட்சிகளாக "நீலமும்","நீரும்".
பொய்ச் சாட்சிகளாக
மின்னலின் சப்தங்கள்.
வன்புணர்வாளனின் வழக்கறிஞன்
சமுத்திர அலைகள்.
அ-நீதி கிடைத்தது!!!!
மேகங்கள் வரையாடு குடியிருக்கும் மலைமுடிகளில்
குடிகொள்ளப் போனது.......
மறுபுறம்,
மின்னல்கள் இன்னமும் வெட்டியடிக்குது......
சமுத்திரம் நீதிபதியாகவே ராஜ கிரீடத்தில் அமர்கிறது......
=========
By:சுயாந்தன்.
Comments
Post a Comment