உவமைக் கேள்வி

உவமைக் கேள்வி.
=============
கார்த்திகையின் முன்பனிக்குள் சிக்கிக்கொண்ட காற்று,
ஜனவரி பின்பனிக்கு ஏங்குவது போல,

சமுத்திரக் கரையினின்று சுதந்திரப் பறவையொன்று, ஆழ்கடல் கிளிஞ்சல்களை அழைப்பது போல,

வெட்டப்பட்டு வெறித்த காயங்களுக்கு,
கொல்லப்பட்ட மயிலிறகால் குருதி வருடுவது போல,

விற்களால் ஏவுண்ட ஓராயிரம் அம்புகள் தெரிவுக் கொலைகளை மட்டும் செய்வது போல,

காலாதீதமான கச்சைத் துணிகளுக்குள் கட்டுண்ட  கயிலாயம் போல,

நீயும்,
நீ சார்ந்த நிலனும்,
நீ என்ற நீயும்,
'சில உவமைகளால் ஆன என்னை',
"நீயாக" மாற்ற முயல்வதும் ஏனோ????

உன் நிர்வாணங்களால்
என்னைப் பரிகசிக்கவும்
முயல்கிறாய்....

========
By: சுயாந்தன்.

Comments

Popular Posts