தனித்தலைதல்
தனித்தலைதல்.
==========
ஒரு வனாந்தரத்தின் தனித்தலையும் காற்றுடன்
சிறு பூக்களையும் சூடிக்கொண்ட அவளது புன்னகையால்
பெருவனமே தனித்தலையத் தொடங்கியது...
==========
எங்கோ தொடர்ந்த வனத்தின்
களைப்புற்ற கண்ணிமைகள்
வேசிகளின் சமைந்த முலைகளில்
முட்டி புதிதாக சில பூக்களையும் தருவித்துப் போகிறது.
==========
பூக்களின் பின்பக்க மகரந்தங்களால் எழுதப்பட்ட பெண்யோனிகளின் அந்தரங்க சிலுவைச் Symbol கள்
என் உட்கரத்தின் முகட்டு ரேகைகளில் பயனுள்ள குறிப்புகள் தந்து போகிறது.
===========
மனிதத் தன்மைகளில் வெறுப்புற்ற நான் தனித்தலையும் வனத்துடன் சென்றிருப்பேன் நானாகவே.....
ஆனால் இந்தப் பெண்குறிகள் வேறொரு அலைச்சலை எனக்கு மூட்டி விட்டுத் தூங்குகின்றன.....
========
சுயாந்தன்
Comments
Post a Comment