எனக்கு தெரிந்த ஒரு ஊருண்டு
எனக்குத் தெரிந்த ஒரு ஊருண்டு...
=======
எனக்குத் தெரிந்த
ஒரு ஊருண்டு.....
அங்கே எனக்கான
துரோகிகளும்
போலி நண்பர்களும்
தகுதியற்ற எதிரிகளும்
தாசிகளும் உளர்......
சவப்பெட்டிகள் அடுக்கும்
கோயிலில் தான் அவர்கள் ஒன்றுதிரள்வர்...
விபச்சாரிகளின் கடைகளில் தான்
ஊரவர்கள் இலக்கியமும் பேசுவர்.....
திரும்பத் திரும்ப முன்னேறும் வம்சங்களைக் கருவறுக்க
முற்போக்கு மடையர்களாக ஊளையிடுவர்....
அந்த ஊருக்குள் தன்னையே ஜாம்பவானாகப் பிரசுரிக்கும்
சிறகொடிந்த கோமாளி
ஒருவன் தான்
ஊர்த்தலைவன்....
காற்றிருக்க..
குளமிருக்க...
சிறு புல்லிருக்க...
எல்லாம் அவ்வாறே இருந்துவிட
சமூகக் கடமைகளை அறியாது
அவசர மழை சிந்திய துளியாக
கிளர்ந்தெழுகின்றனர்.
பொதுவுடைமை என்னவென்றே அறியாது
கார்ல் மார்க்சை Frame செய்து
சுவரில் மாட்டும்
எனக்குத் தெரிந்த ஊர்க்காரர்கள்.......
தேவதாசிகளின் மொழிமைகளை தேவ வாக்காகத் தின்னும் மூடர்களே,
உங்களது பதின்மலீலைகளை மறந்து மற்றவன் வேஷ்ட்டிகளை அவிழ்க்காதீர்கள்.....
எனக்குத் தெரிந்த ஒரு ஊர் உண்டு.
அங்கே;
தம்மைத் தமிழ்ப் பற்றாளர்களாகவும்,
வீரமறவர்களாகவும்,
கூறிக்கொண்டு சமூக மறுமலர்ச்சிக்கு மானத்தை அடகு வைத்து
"எச்சில் வாயர்கள்"
புரட்சி செய்கிறார்கள்....
ஊர்த்தலைவனின் மனைவியை
ராவணன் கவர்ந்த கதை தெரியாமல்........
By: இ.சுயாந்தன்.
Comments
Post a Comment