பழிவாங்கல்
பழிவாங்கல்
••••••••••••
காதலியின் உதடுகளில்
கடித்துவிட்ட ஒரு எறும்புக்கு
இன்று மரணதண்டனை..
நான்கு தலைமுறைகளின்
தொடர்ச்சியில்
எனக்குத் தரப்பட்ட
ரொட்டிக் கல்லில்
எறும்பின் கடைசி முடிவுக்காக;
விறகு தீயாகிறது.....
சில எறும்புகள் அங்கே;
நீண்ட வரிசையில் ஆர்ப்பாட்டங்களில்......
பாண் துண்டுகளுக்காக
முண்டியடிக்கும் நெருக்குதல்களில்......
யானையின் மூக்கினைத்
தேடிய களைப்பில்.......
அதில் ஒரு சிட்டெறும்பு மட்டும்
என் கவிதை நோட்டைக்
கிழிப்பதில் குறியாக நிற்கிறது...
ஏனோ...?????
••••
By:: சுயாந்தன்.
Comments
Post a Comment