சிறுவனம்

சிறுவனம்.
=========
தேவமனோகரமான யௌவனக்காரியே,
என்னருகே வளரும்
இச்சிறு வனத்தை எரித்துவிடு.

ஒவ்வொருமுறையும்
முன்னேறி வருகின்ற
காமத்தின் விளைநிலம் 
காதலென்ற அருவருப்புடன் 
முன்னேறி விடுகிறது 
மீதமுள்ள ஒரு தொடுகை.

ஒவ்வொருமுறையும்
நான் நனைந்த உன்
ஆனந்த ஏரிகளின் 
அணையாத பொழுதுகளை 
ஏதேனுமொரு சூரியச்சூடு 
எரித்துவிடுகிறது.

ஒவ்வொருமுறையும்
உனக்கும் எனக்குமான
புரிந்துணராப் பொழுதுக்கான 
தூரங்களை ஒற்றை முத்தங்கள் 
ஓரங்கட்டிவிடுகின்றது.

ஒவ்வொருமுறையும் இப்படியே 
தாவிக்கடந்து போவதற்குப் பதில் 
ஒரு முறையாவது 
மொத்தக்காதலின் 
பொய்மைகளால் என்னைக் 
கொழுத்திப் பின் கரைத்துவிட்டுக்
கடந்துபோ....

இ.சுயாந்தன்.

Comments