கைகளில்....

கைகளில்...
======
பெண் ஒருத்தியின் கூந்தல் முழுவதும் நிரம்பிய மலர்களை ஒவ்வொன்றாக  எடுக்கின்றான் பூக்களைப் படைத்தவன்.

எடுக்க எடுக்கப் புதிதாகப் பூக்கின்றன பூக்கள்.
முதலில் எடுத்த பூக்களை பூஞ்செடிகளிடம்  கொண்டு சேர்க்க ஓடுகிறான் அவன்.

புதிதாகப் பூத்த "கூந்தல் பூக்களால்" நிரம்பி வழியத் தொடங்கியது அவனது பூங்கா...
தற்போது அவன் கைகளில் ஒரு உலகமே பூப்பூக்கத் தொடங்குகிறது....
அந்தப் பெண்ணை எதற்காகவோ தேடியலைகிறான் அவன்........
====
சுயாந்தன்.

Comments