மழைக்கான முகமூடி


1. மழைக்கான முகமூடி.
======
நான் உன்னோடு நடந்து கொண்டிருக்கும் போது, யார்யாரோ கேட்டார்கள்,
வரும் வழியில் அடை மழை பெய்கின்றதா என்று??....

நான் அதனைக் கவனித்திருக்கவில்லை.
எனினும் அவர்களுக்குச்
சரியான பதிலைச் சொன்னேன்.

சிலவேளைகளில் அவர்கள் என்னைக் கிறுக்கன் என்றும் நினைத்திருக்கலாம்.
இதனைப் பின்பு தான் ஜோசித்துப் பார்த்தேன்.....!!!!
==
இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments