இலங்கையில் இந்துத் தேசியம்: எதிர்வினைகள்.

இலங்கையில் இந்துத் தேசியம் பற்றிய உரையாடலை அச்ச உணர்வுடன் கொண்டு சென்றவர்கள் யாரென்று பார்த்தால் அவர்களது குள்ளநரித்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
1. முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் அடிப்படைவாதிகள்.
2. திராவிடக் கட்சி அரசியலை ஆதரிப்பவர்கள்.
3. தலித்தியம் பேசும் சந்தர்ப்பவாதிகள்.
4. புலம்பெயர்ந்த தமிழ் லிபரல்கள் புரட்சியாளர்கள்.
5. எந்த ஒரு பிரக்ஞையும் இல்லாத தற்குறிகள்.
இதில் இறுதியாகக் கூறப்பட்டவர்களைப் பற்றி எந்த அபிப்பிராயமும் என்னிடமில்லை. முதல் குறிப்பிட்ட நான்கு வகையினருக்கும் இந்து மதத்தையும் இந்துத் தேசியத்தையும் எதிர்ப்பதால் பெருமளவு நன்மை கிடைக்கிறது. எப்படியென்ற பார்வைதான் இது.
முஸ்லிம் அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்ளும் அநேகமானவர்கள் அடிப்படைவாதிகள்தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெறுமனே வாயால் முற்போக்கைப் பேசிவிட்டு மனதால் மத அடிப்படைவாதங்களை நிலைநிறுத்திச் செயலில் காட்டுபவர்கள். அவர்களுக்கு இலங்கையில் இந்துத் தேசியம் மற்றும் இந்து என்ற அடையாளத்தைத் தமிழர்கள் வலியுறுத்தும்போது பெரும் அச்சம் ஏற்படுகிறது. அதற்குக் காரணங்கள்.
1. இந்துத் தமிழர்களுக்கான இந்திய ஆதரவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பலமான உதவியும்.
2. பண்பாட்டு ரீதியில் ஒன்றுபட்டுள்ள இந்து-பௌத்த கூட்டணியால் ஏற்படும் அச்சுறுத்தல்.
இந்த இரண்டு விடயங்களின் மூலம் தமிழர்கள் தம்மை அமைப்பு ரீதியில் பலமானவர்களாகக் கட்டமைத்து விடுவர். இதனால் தமிழர் நிலங்களையோ இதர ஆக்கிரமிப்புகளையோ வெளிப்படையாக மேற்கொள்ள முடியாது. தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஈடுபட்டுவரும் இவர்களுக்கு இந்த இந்துத் தேசியம் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறுகிறது. அதாவது தமிழர்களுக்கான பாதுகாப்பு அரணாக இருக்கிறது. இதனால் அண்மைய நாட்களாக ஒரே மொழி பேசுபவர்கள் நாம் என்று போலியான உரையாடல்களை முஸ்லிம்கள் மேற்கொள்கின்றனர். ஒரே மொழி பேசுபவர்களான நாம் மத ரீதியில் வேறுபட்டு நிற்கிறோம். இந்த இரண்டு மதத்தையும் இணைத்துத் தரும் தீர்வு என்பது எப்போதும் தமிழர்களுக்கு ஆபத்தானதாகவே மாறும். அதாவது கம்யூனிசத்தையோ மதச்சார்பின்மையையோ தமிழர்கள் வலிந்து ஏற்கும்போது இஸ்லாமியர்கள் எப்போதும் அதனைப் பின்பற்ற மாட்டார்கள். அப்படியான சந்தர்ப்பத்தில் அதிகாரம் மதச்சார்பை விடாத ஒரு தரப்பை அடையும் போது இன்னொரு தரப்பினர் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது. சமயத்தில் "நீ என்வழிக்கு வா. இல்லையென்றால் உன்வழி காலி" என்ற இஸ்லாமிய படையெடுப்பு மனோபாவம் அங்கு வேரூன்றுகிறது. இப்படியான நிலைகளின் பாதிக்கப்படுவது தமிழர்கள்தான். குறிப்பாக இந்துத் தமிழர்கள். இந்த நீண்டகாலக் குறிக்கோளின்படிதான் இலங்கையின் இஸ்லாமிய அடிப்படைவாத அமைச்சர்கள் பலர் தமிழர் பகுதிகளில் தமது பணிகளைத் தீவிரமாக முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். இங்கே சூஃபியிச எண்ணங்கொண்ட இஸ்லாமியர்களுடன் கூட இந்த இஸ்லாமிய மையங்கள் உடன்படுவதில்லை. அப்படி வஹாபியிசம் நாடு முழுக்க இஸ்லாமிய இளைஞர்களிடம் பரவி இருக்கும்போது இப்போது இந்த போலி நல்லிணக்கம் பெரும் வன்முறையையே தோற்றுவிக்கும். உதாரணமாக இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இது தொடர்பாக அறிவித்துவிட்டார்கள். வடக்குகிழக்கை இணைத்தால் இரத்த ஆறு ஓடும் என்று.
இரண்டாவது விடயம் திராவிடக் கட்சி அரசியலை முன்வைத்து இங்குள்ள தமிழர்களை உணர்சிவயப்பட வைப்பவர்கள். இவர்களுடன் புதிய தமிழ்த்தேசியவாதிகளும் இணைந்துள்ளனர். இது அவர்களது அரசியலையும் சீரழிப்பதுடன் இல்லாமல் இலங்கைத் தமிழரின் இருப்பையும் கேள்விக்கு உண்டாக்குகிறது. இங்குள்ள பௌத்த அதிகார மையங்களான மஹாநாயக்க தேரர்கள் தமிழ்த் தேசியம் என்பதை மிக அச்சுறுத்தலான ஒன்றாகவே பார்க்கின்றனர். இது தேசியத்தைப் பிளந்து நாட்டையே குட்டிச் சுவராக்கும் என்ற தூரநோக்கு அவர்களிடம் உண்டு. இதனை அங்குள்ள மஹா நாயக்கர்களில் ஒருவரின் திறந்த மனதுடனான உரையாடல் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் எப்போதும் தமிழ்-சிங்கள இணைவு என்பதைவிட பௌத்த-இந்து என்ற பண்பாட்டு ஒற்றுமையையே விரும்புகின்றனர். இது வெறுமனே அவர்கள் முன்வைக்கும் தீர்வு அல்ல. தேசியத்தைப் பிளந்து வன்முறையை தோக்கிக் கொண்டுசெல்லாத ஒன்றாகவே அவர்களால் நோக்கப் படுகிறது. இந்த அரசியலைத்தான் சேர்.பொன்.ராமநாதன் மேற்கொண்டிருந்தார். அவர் காலத்தில் தமிழர்கள் பாதுகாப்பையே உணர்ந்தனர். ஆனால் எப்போது திராவிடவாதம் இலங்கையில் காலூன்றியதோ அப்போது தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் வலுப்பெற்று வன்முறை அரசியல் ஒன்றே தீர்வு என்று தமிழர்கள் நம்பத் தொடங்கினர். இன்றும் நம்புகின்றனர். ஒருகாலமும் சிங்கள-பௌத்த தேசியவாதிகள் தமிழ்த் தேசியத்துக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார்கள். அங்குள்ள அதிகார பீடங்களை இயக்கும் மஹா நாயக்கர்கள் எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியப் போவதில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த கட்சி அரசியலை முன்வைத்து இங்குள்ள மக்களையும் தமிழர்களையும் இப்போதும் தமிழகக் கட்சிகள் குழப்பியடிக்கின்றனர். காட்டுக்கூச்சல் போடுகின்றனர். இலங்கையின் நடைமுறை யதார்த்தம் அறியாத திராவிடக் கட்சி அரசியல்காரர்கள்தான் தமிழ்த்தேசியத்தை இங்கே முன்வைக்கின்றனர். இது எக்காலமும் சாத்தியமற்ற ஒன்று.
மூன்றாவது தலித்திய அரசியலை இங்கே முன்வைப்பவர்கள். அ.மார்க்ஸ், ஷோபா சக்தி போன்ற சிலர் இலங்கையில் தலித்திய அரசியலை முன்வைப்பதற்கான முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். தலித் என்ற சொல்லை உணராத மக்களிடம் அதை முன்வைக்கப் போகும் இந்த அறிவுஜீவிகள் தம்மை பொதுவுடைமை வாதிகளாகக் காட்டிக்கொள்கின்றனர். இதன் மூலம் தமிழர்களில் ஒரு பிரிவையும் முஸ்லிம்களையும் கிறிஸ்த்தவர்களையும் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றிணைப்பதற்கான முனைப்புத்தான் இது. மிக மோசமான வர்க்கவாதக் கலவரங்களைத் தூண்டுவதற்கான முயற்சிதான் இது. இங்குள்ள மக்கள் தம்மை இந்துக்களாகவும் தமிழர்களாகவும் கருதுகின்றனர். அதுபோலச் சிங்களவர்களிலும் பௌத்தர்களாகக் கருதுகின்றனர். இப்படியொரு சிறிய நாட்டில் இவ்வளவு உக்கிரமான நிகழ்த்துகையை இவர்கள் மேற்கொள்ளப் பார்க்கின்றனர்.
இதற்கு முதன்மையான தேவை இந்து மத எதிர்ப்பை முன்வைத்தல். அதனால்தான் எனது இந்துத் தேசியம் பற்றிய கட்டுரைகளுக்கும் கடுமையான தொணியில் எதிர்வினையாற்றியுள்ளனர். நான் எப்போதும் பெரும்பான்மை அங்கீகாரத்தை விரும்பாமல்தான் கட்டுரைகளையும் இலக்கியப் பதிவுகளையும் எழுதி வருகிறேன். ஆனால் எனது இந்தக் கட்டுரைகளின் உண்மைத்தன்மை இந்த போலி தலித்தியவாதிகளுக்கும் தேசியத்தைக் குழப்புவோருக்கும் மதமாற்றக்காரர்களுக்கும் பெரும் தலையிடியாக அமையும். அதனால்தான் இத்தனை எதிர்ப்பு.
நான்காவது விடயம் புலம்பெயர்ந்த லிபரல்கள். இவர்களைப் பற்றிப் பெரிதாகப் பேச எதுவும் இல்லை. இவர்களது அரசியல் இரண்டு வகையானது. அதாவது அங்கிருந்து கொண்டு தமது கொள்கையை இரண்டு வகையில் எம்மீது திணிப்பர்.
1. தனிநாடு கோர இங்குள்ளோரை உசுப்புதல்.
2. Political Correctness நிலைப்பாட்டின் மூலம் இந்துத் தமிழர்கள் என்ற அடையாளத்தைக் களைதல். (போலி மதச்சார்பின்மை)
இந்த இரண்டும் எவ்வளவு அபாயகரமானது என்று இங்குள்ள யதார்த்த அரசியலை அறிந்தோரால் உணரமுடியும். ஆகவே புலம்பெயர்ந்தவர்கள் கருத்து எவ்வகையிலும் இங்கே வேலைக்கு ஆகாது.
இலங்கையில் இந்துத் தேசியத்தை எதிர்ப்பவர்கள் எப்போதும் இங்குள்ள பெரும்பான்மைத் தமிழர்களின் இருப்பில் விளையாடி அடையாள அழிப்புக்குத் துணை போகின்றவர்கள் என்பதே உண்மை.
00

Comments

Popular Posts