இந்துத் தேசியம்: தமிழக வெறுப்பரசியலை இலங்கையில் வேரறுத்தல்.

ஆனையிறவு யுத்தத்தில் தனது தந்தையை இழந்த சிங்கள-பௌத்த பெண்ணொருவரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவரது தந்தை லெப்ரினன்ட் கேணல் தர அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். இறந்தபின்னர் கேணல் பட்டம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது. புலிகளுடனான மோதலில் இரண்டாயிரங்களின் தொடக்க ஆண்டுகளில் கொல்லப்பட்டிருந்தார். அதே போலத் தமிழ் பிள்ளைகளில் ஏராளம் பேர் தந்தையை தாயை சகோதரங்களை கணவன்மாரை இழந்தவர்களும் இருக்கின்றனர்.

அவரிடம் பேசும்போது எனக்குள் பலகாலமாக இருந்த சந்தேகங்களை முன்வைத்திருந்தேன். குறிப்பாகத் தமிழர்களின் போராட்டம் பற்றிய நியாயங்களை மொத்தச் சிங்களவர்களும் புரிந்து கொள்வதில்லை என்பது போல பேசும்போது அவர் அதனை மறுத்திருந்தார். தமிழர்களின் போராட்டம் சரியானதுதான் ஆனால் வன்முறை மூலம் அதனை வழிநடாத்தி அப்பாவிகள் பலிகொள்ளப்பட்டது பிழையான விடயம். அரசாங்கத்தால் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மைதான். இறுதி யுத்தங்களில் பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட காடசிகளைப் பார்க்கும் போது பதற்றமே எஞ்சியது. அதேபோல புலிகளாலும் சிங்கள அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு எங்கள் பிழைகளையும் தமது பிழைகளையும் தாராள மனத்துடன் வெளிப்படுத்தும் சிங்களவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.  இது தனியொரு சிங்களப் பெண்ணின் கருத்தல்ல. அதேகமான சிங்களவர்களின் கருத்து இதுதான். 

இங்கு வெளிப்படுவது சகவாழ்வு விடயத்துக்கு சிங்கள பௌத்த மக்கள் தயாராகவே உள்ளனர் என்பதாகும். ஆனால் முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியானோர் என்ன சொல்கிறார்கள். வடக்கிலிருந்து புலிகள் வெளியேற்றி விட்டனர் என்ற ஒன்றைப் பிடித்து வைத்துக்கொண்டு தமது ஜிகாதியக் குழுக்கள் தமிழர் மீது நடாத்திய படுகொலைகளை ஏற்க மறுக்கின்றனர். தமிழர்களின் நிலங்களை அதிகாரம் மூலம் பிடுங்க வேண்டும். இந்துப் பண்பாடுகளை அழிக்கவேண்டும். தமிழ் இளைஞர்களைப் புலிகளாகச் சித்தரித்து அவர்களை ஓரங்கட்டவேண்டும். இந்த மனநிலையில்தான் அநேகமான முஸ்லிம் மக்கள் நம்முடன் உரையாடுகின்றனர். அவர்களில் மிதவாதிகளைக் காண்பதென்பது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான்.
தொடர்ந்து பல காலமாக இதனை நான் அவதானித்து வருகிறேன். எந்த முஸ்லிமும் நியாயமாகப் பேசிப் பார்த்தது இல்லை. ஒன்று புலிப்புராணம் பாடி தங்களை நியாயப்படுத்துகின்றனர். அல்லது திராவிடவாதம் பேசியும் திராவிடக் கொள்கைகளை மெச்சியும் இந்துக்களிடையே சூட்சுமமான பிளவுகளை ஏற்படுத்துகின்றனர். அல்லது வெளிப்படையாகவே மதவாதத்தைக் காட்டுகின்றனர்.


                                        Shri Narendra Modi In Jaffna
இப்படியான நிலையில் முஸ்லிம்களுடன் சகவாழ்வு அத்தியாவசியமானது என்று தமிழர்கள் நம்புவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்.
இதயசுத்தியுடன் உரையாடவோ இணைந்து பயணிக்கவோ முடியாது, தமது பிழைகளை ஏற்காது சப்பைக் கட்டு கட்டியபடி இருப்பவர்களுடன் சகவாழ்வுக்குச் செல்லலாம் என்று சில தமிழர்கள் அரசியல் சரிநிலைகளில் நின்று யோசிக்கிறார்கள். இப்படியான அறியாமைகளால் மிகத் தந்திரமாகத் தமிழர் நிலங்களும் அடையாளங்களும் களவாடப்படும் என்பதே உண்மை. அதுதான் நடந்துவருகிறது.
இந்தக் கேலிக்கூத்தான சகவாழ்வை விடுத்து தமிழர்களுக்குள் முதலில் உரையாடவேண்டும். அவர்கள் எப்படிப் பலமான நிறுவனமயத்தை மதம் மூலம் உண்டாக்கி இந்துக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்பதை நுணுக்கமாக அறிந்து கொள்ளவேண்டும். இந்து அடையாளங்களும் இந்துக்களின் தனித்துவங்களையும் அதிகாரம் மூலம் எப்படிக் கவரத் தொடங்கியுள்ளனர் என்பதைச் சிந்திக்க வேண்டும். இதனை வெளிப்படையாகப் பேசினால் இனவாதி என்றோ மதவாதி என்றோ கூறுவார்கள். உண்மையைச் சொன்னால் முத்திரை குத்துவது வழக்கமான விடயம்.



இஸ்லாமியப் பிரிவுகளிடையே சூஃபி இஸ்லாத்தைப் பின்பற்றுவோரிடம் மிக நெருக்கமான உரையாடலையும் உறவுகளையும் மேற்கொள்ள முடியும். இந்தப் பிரிவினர் தமிழகம் மற்றும் கேரளப் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். இங்கும் ஒருசில சூஃபிக்கள் இருக்கின்றனர். இஸ்லாமின் தொடக்க காலத்தில் உண்டான ஆச்சார முறைகளுடன் இது வளர்ந்துள்ளது.இந்திய சமூகங்களிடையே என்றாலும்சரி பிற சமூகங்களிடையே என்றாலும் சரி இந்த இறைத்துவ நிலையைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் மாற்றுச் சமூக நடவடிக்கைகளுக்கு இடையூறுகளையும் அடிப்படைவாத எண்ணக்கருக்களையும் வழங்க மாட்டார்கள். இது இஸ்லாத்தின் ஆரம்பநிலை. இங்குள்ள சித்தர் மரபு போன்ற ஒரு இறைப்பரிணாமம் கொண்டது. ஆனால் இந்த மரபுகளைப் பின்வந்த வஹாபிகள் உடைத்தெறியத் தொடங்கிவிட்டனர். இஸ்லாத்தின் பன்மைத்துவமான சூஃபிசம் உடைத்தெறியப்பட்டு உலகம் முழுமைக்கும் வஹாபியம் பரவத் தொடங்கியது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற எளிய புரிதல். இந்த அடிப்படைவாதம் இலங்கையின் சகல பாகங்களிலும் முளைகொள்ளத் தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் தௌஹீத் ஜமாஅத் போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புக்களின் கவர்ச்சிகரமான மேடைப் பேச்சு. இலகுவில் உணர்ச்சிவயப்படக் கூடிய ஒருவர் மிக விரைவிலேயே அதற்குள் ஆட்படத் தொடங்குகிறார். அவர்கள் சொல்வது அனைத்தையும் நம்பத் தொடங்குகிறார். இதனால் இஸ்லாத்தின் பன்மைத்துவம் அழிந்து அடிப்படைவாதம் மேலெழுகிறது. மற்ற சமூகங்கள் மீது கலாசார நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனை மத நம்பிக்கைகள் என்று அவர்களால் இலகுவில் சொல்லி நகர்ந்துவிடவும் முடிகிறது. எதிர்ப்பவர்களை இஸ்லாமோபோபியா என்ற இக்கட்டுக்குள் இழைத்துவிடுகின்றனர்.

இலங்கையில் நாற்பது வருங்களுக்கு முன்பாக எந்த இஸ்லாமியப் பெண்ணும் அபாயா என்கிற உடலை முழுமையாக மூடிய கறுப்பு உடையை அணிந்ததில்லை. இங்குள்ள எந்த ஒரு நியாயவானும் அதை அறிவான். ஆரம்பத்தில் இருந்த பன்மைத்துவத்தை அழித்து அடிப்படைவாதம் புகுத்தப்பட்டுள்ளது. இவை ஏனைய சமூகங்கள் மீது பெரும் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. எளிதில் உணர்வுவயப்படும் ஒருவரால் அதனை ஏற்கமுடியாத கலாசார அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். இதனால் தாமும் அந்த வழிமுறைகளைத் தமது கலாசார நோக்கில் தீவிரமாகப் பின்பற்றவேண்டும் என்ற வழிமுறையை எடுக்கின்றார். இது தேசிய ரீதியில் மாபெரும் தளம்பலையும் வன்முறைப் போக்கையும் உண்டாக்கிவிடுகிறது.
இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வேண்டாம் என்று கூறும் இடதுசாரிகள் தௌஹீத் ஜமாஅத் போன்ற அமைப்புக்கள் வரும்போது மறுத்துப் பேசமாட்டார்கள். அவர்களது மதமாற்றங்களையும் பன்மைத்துவ அழிப்புகளையும் வாய்திறந்து பேசமாட்டார்கள். அத்துடன் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரச ஆதரவு இஸ்லாமிய அதிகார மையங்களை ஏனென்றுகூட விமர்சிக்க மாட்டார்கள். நல்ல ஒரு உதாரணத்தை இங்கே கூறமுடியும் இந்தியாவில் Popular Front Of India என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பொன்று இயங்கி வந்தது. அதன்மூலமாகக் கட்டாய மதமாற்றங்களும் லவ் ஜிகாத்களும் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்றது. இந்த PFI அமைப்பு கேரளத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களையும் படுகொலை செய்தது. இதன் பின்னர் இந்த அமைப்பைத் தடை செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டது. ஆனால் அறிவுஜீவிகள் என்ற பெயரில் இருந்த சிலர் இந்த அமைப்பைத் தடை செய்வதை எதிர்க்கிறோம் என்று காட்டுக்கூச்சல் போட்டனர். அ.மார்க்ஸ் என்கிற அறிவுஜீவியும் சீமான் முதலிய தமிழக அரசியல்வாதிகளும் தடைக்கு எதிராகத் தீவிரமாக இயங்கி எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த அரசியல் சரிநிலை ஒரு தேசியத்தின் தளம்பல் போக்குக்கு மிகப்பெரும் பாதகத்தை உண்டாக்கக் கூடியதாக உள்ளது.

இதே நிலையைத்தான் இலங்கையிலும் பலர் கொணர முயல்கின்றனர்.  தென்னிந்தியத் திருச்சபை என்ற பெயரில் இலங்கையில் பல கிறிஸ்தவ மிசனரிகள் இயங்குகின்றன. தமிழ்நாடு ஜமாஅத் அமைப்பை இங்கே ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்ற பெயரிலும் வேறு பல பெயர்களிலும் இயக்குகின்றனர். பௌத்த மஹாநாயக்கர்களின் தூண்டுதலின் பெயரில் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் இயங்குகின்றன. ஆனால் இந்துக்களின் குரலாக எந்த அமைப்பும் உருவாக்கப்படவில்லை. அப்படி உருவாக்க முனைகையில் இஸ்லாமிய அறிவுஜீவிகளும், திராவிட- இடதுசாரிய மூடர்களும் முட்டுக்கட்டை போட்டுவிடுகின்றனர். குறிப்பாக இஸலாமிய அறிவுஜீவிகள் தமது எழுத்துத் தூண்டுதலின் பெயரில் இந்து அமைப்புக்கள் தீவிரவாதக் கொள்கை உள்ளவை என்ற வாதத்தை முன்வைக்கின்றன. இந்தப் பிரச்சாரத்தை முற்போக்கு முகமூடி அணிந்த பல தமிழ்க் குருவிமண்டைகள் இளைஞர்களிடையே பரப்பிவிடுகின்றன.  இந்த இடைவெளிக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை அரச அதிகாரத்திலுள்ள இஸ்லாமியர்கள் உரமூட்டி வளர்க்கின்றனர். எந்த அடிப்படைப் புரிதலும் பிரக்ஞையும் இல்லாத இந்துக்கள் தமது அடையாளம் தொலைக்கப்பட்டுக் கோயில்கள் சந்தைகள் ஆக்கப்படுகிறதே என்ற தெளிவின்றி அவதிப்படுகின்றனர். எல்லாம் முடிவடையும்போது இந்து மரபுகளை அழித்துவிட்ட மமதையில் அதிகாரத்தை மனிதம் மீது கையாளத் தொடங்கும்போதுதான் இந்துத் தேசியம் வலியுறுத்தப்படுகிறது. இதனை இங்கே சற்று முன்பாக வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பான தமிழகக் கட்சிகளின் எந்தக் கோஷங்களும் தேசிய அளவில் பொருட்படுத்தப்  படுவதில்லை. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வினை இலங்கைத் தமிழர்கள் இந்தியத் தேசியத்தில் இருந்துதான் பெறமுடியும். மாறாகத் திராவிடம் போன்ற வெத்து வேட்டுக்களிடமிருந்தல்ல.   இந்தியத் தேசியத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் இந்துக்கள் என்ற பிரக்ஞையை இங்குள்ள தமிழர்கள் ஆழமாக உணரவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்துக்கள் அறிவை ஏற்படுத்துவதற்கு இத்துத்துவ அமைப்புக்கள் மாவட்ட அளவில் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டுத் தொடங்கப்பட வேண்டும்.

தமிழகப் பிரிவினைவாதிகள் இன்னமும் இலங்கைத் தமிழர்களை இன்னல்களுக்கு ஆளாக்கப் போகிறார்கள் என்பதை அண்மைய சம்பவங்கள் காட்டுகின்றது. அவர்களது எந்த ஒரு செயற்பாடுகளும் இலங்கை இந்தியத் தேசியங்களைப் பாதிப்பதில்லை. எமது பிரச்சனைகளுக்கு அவர்களை நம்பும் இந்த முட்டாள்த்தனத்திலிருந்து  இலங்கைத் தமிழர்கள் மீண்டெழ வேண்டும்.  இங்கு எஞ்சியுள்ள தமிழர்கள் தமது ஒற்றுமை மூலம் தேசிய பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்த சாதகமான ஒற்றுமையை வெளிப்படுத்துவதன் மூலம் அடைந்து கொள்ளலாம். 



இதற்கு வாய்ப்பாக நம்முன்னே இருக்கும் வழிகள்:

1. இந்துத்தேசியத்தை இலங்கையில் முன்வைத்து இந்தியத் தேசியவாதிகளின் ஆதரவுடன் இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டுத் தமிழர்கள் செயற்படுதல். தீர்வுகளுக்காக இங்கே சங்பரிவார பிரச்சாரகர்களை அரச ஆதரவுடன் செயற்படுத்துதல். இந்துத்துவத்தைக் கட்டியமைத்தல்.

2. இஸ்லாமியர்களுடன் தமிழர்கள் சேர்ந்து ஒன்றிணைந்த வடகிழக்கு என்று  தீர்வுகளை முன்வைத்தல். (எப்போதும் சாத்தியமற்ற விடயம் இது. இதற்கு இஸ்லாமியர்களும் தமிழர்களும் ஆதரவு தரமாட்டார்கள்.)

3. மீளவும் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தச் செய்தல். (சாத்தியமற்ற ஒரு முட்டாள்த்தனமான செயற்பாடு. தற்கொலைக்கு நிகரான நடவடிக்கை.)

4. இடதுசாரிகள் சொல்வது போலவும் திராவிட மூடர்கள் பிரச்சாரம் செய்வது போலவும்  எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தல். (இது தமிழர்களின் அடையாள அழிப்புக்கு வழி செய்யும். ஏற்கனவே அதிகாரம் கிடைத்த இஸ்லாமிய அதிகார மையங்களால் தமிழர்கள் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். )

இதனை வாசிக்கும் போதே உங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. எது இலங்கைத் தமிழர்களுக்குச் சாத்தியமான அரசியல் தீர்வு என்று. குறிப்பாக இங்கே தமிழர்கள் எனப்படுபவர்கள் இந்துக்களும் கிறிஸ்த்தவர்களும்தான். இங்கே கிறிஸ்த்தவர்கள் தமிழகத்தைப் போலன்றி இந்துக்களுடன் மணவினைத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். மாறாக சந்தர்ப்பவாத அடிப்படைவாத அரசியல் மேற்கொள்ளும் இஸ்லாமிய அதிகார மையங்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் இங்கே தனியான ஒரு இனம். அவர்களுக்கான தீர்வை அரசாங்கத்தில் கடந்தகாலங்களில் இணைந்து பலதசாப்தங்களாகச் செயற்படும் அவர்கள்தான் முன்வைக்கவேண்டும்.

மாறாக இதற்கும் தமிழர்களை நம்பி இருப்பது முட்டாள்த்தனமானது. தமிழர்கள் மீது பழிபோட்டு நகர்வதை ஏற்கமுடியாது. அரசுடன் தொடர்ந்து இணைந்துள்ள முஸ்லிம்கள் கடந்த காலங்களில் சிங்களத் தேசியவாதிகளுடன்தான் இணைந்து செயற்பட்டார்கள். அவர்கள் தற்போது அடிப்படைவாத தமிழர் விரோத அரசியலைச் செய்து வருகிறார்கள்.
ஆகவே எம்முன்னுள்ள தீர்வு நடைமுறைக்குச் சாத்தியமான ஒன்றாகும். எமது நாட்டின் சகல விடயங்களிலும் இந்தியாவின் பங்கு அளவிடமுடியாதது. தமிழகக் கட்சிவாத மூடர்கள் எப்போதும் பிரிவினையை விரும்பிச் செயற்படுபவர்கள். அவர்கள்தான் இங்கு தமிழ் மக்கள் பெருந்தொகையாக அழிவுற முக்கிய காரணம். இந்த வழக்கமான அரசியலை விடுத்து இந்துக்களாக ஒன்றிணைந்து இயங்கவேண்டும்.

இந்து ஞான மரபுடன் விவாதம் செய்தே வளர்ந்ததுதான் பௌத்தம்  என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர்கள் என்று தீவிரமாக அந்நியப்பட்டுப் போகும்போது இங்குள்ள நம் இருப்பு கேள்விக்கு உள்ளாகிறது. அதுவே இந்துக்கள் என்று செயற்பட்டால் இந்தியத் தேசியவாதிகளின் ஆதரவுடன் நமது தீர்வுகளை நோக்கி நகரமுடியும்.



இதே தமிழ் மண்ணில் பிறந்து வாழ்பவன் என்ற முறையிலும், எவ்வித அரசியல் வியாபாரிகளுடனும் தொடர்பை வைக்காதவன் என்ற முறையிலும்,  இலங்கைத் தமிழர்களின் அன்றாட உயிர் உடமை இழப்புக்களைப் பார்த்தவன் என்ற முறையிலும் சொல்கிறேன் நம்முன்னுள்ள தீர்வு இதைத் தவிர வேறெதுவும் இல்லை. அதற்கான அடிக்கல்லை  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சங்பரிவாரர்களை இங்குள்ள இந்துத் தமிழ் மாவட்டங்களில் பிரச்சாரகர்களாக வைப்பதன் மூலமும் இலங்கையின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைவதன் மூலமும் நமது இருப்பைத் தக்க வைக்கலாம். இந்துத்தேசிய மக்களாக நம்மை நாமே கட்டமைத்தல் என்பது தற்போதைய அடிப்படைத் தேவை. இதற்கு இங்கே ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன்  இணைந்து செயலாற்றி இந்துக்களைப் பிரித்தாளும் பிரிவினைவாதிகளை வேரறுப்பது கட்டாயமாகும்.

இந்தப் பதிவுக்கு முன்பாக நான் எழுதிய இந்துத்தேசியப் பதிவுகளால் கவரப்பட்டு தமிழ்ச் சமூகத்தின் பிரக்ஞையை வளர்க்க ஆதரவு வழங்கும் அனைவருக்கும் நன்றிகள். 
00

Comments

Popular Posts