இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் - இந்துத்தேசிய அரசியலின் நியாயப்பாடுகள்.
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் ரெலோ தலைவர் கூறுவார் "இலங்கையின் அரசியல் இத்தியாவால் ஆனதென்று". இதையேதான் பத்மநாபாவும் சொன்னார். ஆனால் இந்தக் கருத்தைக் கூறியவர்களைப் புலிகள் படுகொலை செய்தனர். துரோகிகள் என்று பட்டம் சூட்டினர். ஏனென்றால் புலிகள் எப்போதும் இந்தியத் தேசியத்துடன் இணைந்து செல்வதை விரும்பவில்லை. அவர்கள் விரும்பியது தமிழக- திராவிட தொடர்புகளை. மாபெரும் பிரிவினைவாதத்தையும் தேசியங்கள் உடைவதையும் அவர்கள் விரும்பினர். இதனால்தான் புலிகள் மவோயிச பயங்கரவாதிகளுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கினர். ஸ்ரீசபாரத்தினம் முதலானவர்கள் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தார்கள் இந்தியத்தின் துணையுடன். அப்போது இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய- தமிழக நிலைப்பாடு ஒரேமாதிரித்தான் இருந்தது. ஆனால் இவற்றை எல்லாம் சீரழித்து மக்களை அழிவுப் பாதையில் கொண்டு சென்றது புலிகள்தான்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் சமஸ்த்தானங்களை இணைக்கும் பணி காவலம் மாதவன் பணிக்கரின் (K.M.Panicker) தலைமையிலான ராஜதந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைப்பதற்கான யோசனையை நேருவிடமும் சர்தார் வல்லபாய் பட்டேலிடமும் பணிக்கர் எடுத்துரைத்ததாக வரலாறு கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு இந்தியாவின் உட் சமஸ்த்தானங்களை ராணுவத்தை அனுப்பித்தான் இணைக்கவேண்டியும் இருந்தது. அத்துடன் காஷ்மீர் என்பது தலையில் இருந்து பெரும் குடைச்சலை வழங்கியது. அத்துடன் ஆங்கிலேய அரசு இலங்கையை இந்திய நாட்டுடன் இணைக்கவேண்டும் என்ற எந்த வரைபையும் முன்னெடுக்கவில்லை. இலங்கையை அரசியல் முறையில் தமது கட்டுக்குள் வைக்கவே இந்தியா எப்போதும் விரும்பியது. இன்றும் இனியும் விரும்பும்.
இலங்கையின் அரசியலில் இந்தியத்தின் தலையீடுகள் இன்றி எந்தவொரு காரியமும் இங்கே தீவிரமாக நடக்காது. இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட செல்வாக்கை இந்திய அரசியல் மேற்கொண்டுதான் வருகிறது. தமிழர்களுக்கான தீர்வுகூடக் கிடைக்கப் போவதில்லை. இந்த யதார்த்தத்தை இப்படியே எதிர்ப்பு அரசியல் என்று இவன்கள் போகும்போது பத்து வருடங்களில் உணரமுடியும். அடையாள அழிப்பை அதிகாரத்துணையுடன் நடாத்தும் இஸ்லாமியத்தை ஆதரித்து அரசியல் சரிநிலைகளில் கருத்தெழுதும் அறிவுஜீவிகளின் சிந்தனை நடைமுறைச் சாத்தியமற்றது.
குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு அரசியல் எவ்வாறு அமையவேண்டும் என்று இந்தியத் தேசியவாதிகள் தொடர்ந்து கவனிக்கின்றனர். முப்பது வருட யுத்தத்தில் முதல் பத்து வருடங்கள் இந்திய-தமிழக கூட்டுச் சார்பில் இருந்த புலிகள் பிற்பட்ட இருபது வருடங்களில் வெறுமனே தமிழகச் சார்பில் இயங்கினர். இந்த இருபது வருடத்தை எப்படி இவர்கள் இயக்கினார்கள் என்பது ஆச்சரியம் கொள்ளக்கூடிய விடயம்தான். ஆனால் இந்த ஆச்சரியம்தான் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்டது. இது உணர்ச்சிநிலையில் இருந்து அணுகி ஒரு சமூகத்தைத் தற்கொலைக்குக் கொண்டு செல்லும் முறை.
குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு அரசியல் எவ்வாறு அமையவேண்டும் என்று இந்தியத் தேசியவாதிகள் தொடர்ந்து கவனிக்கின்றனர். முப்பது வருட யுத்தத்தில் முதல் பத்து வருடங்கள் இந்திய-தமிழக கூட்டுச் சார்பில் இருந்த புலிகள் பிற்பட்ட இருபது வருடங்களில் வெறுமனே தமிழகச் சார்பில் இயங்கினர். இந்த இருபது வருடத்தை எப்படி இவர்கள் இயக்கினார்கள் என்பது ஆச்சரியம் கொள்ளக்கூடிய விடயம்தான். ஆனால் இந்த ஆச்சரியம்தான் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்டது. இது உணர்ச்சிநிலையில் இருந்து அணுகி ஒரு சமூகத்தைத் தற்கொலைக்குக் கொண்டு செல்லும் முறை.
கடந்த வருடங்களில் இலங்கைக்கான விஜயத்தில் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான தமிழர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்தார் நரேந்திர மோடி. அருகில் இருப்பது வடக்கு முதல்வர்.
இந்தியத் தேசிய அரசியலை எதிர்த்து தமிழக-திராவிட உறவுகளை மாத்திரம் புலிகள் நம்பியது இந்தியத் தேசியவாதிகளை ஆத்திரம் கொள்ள வைத்தது. வடகிழக்குப் பகுதிகளைத் தமது கண்காணிப்பில் வைக்கவே இந்தியா விரும்பியது. இதனைப் புலிகள் இல்லாமல் செய்தனர். இந்தியத் தேசியம் வேறு. தமிழகத் திராவிடத் தேசியம் வேறு. முன்சொல்வது இணைத்துக்கொள்வது. பின்சொன்னது பிரித்தாள்வது. அது பரவலான பிரிவினைவாதம் மூலம் தேசியவாதங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது.
இந்தியத் தேசியம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றால் தமிழர்கள் திராவிடத் தேசியத்தில் மட்டும் தங்கியிருப்பது தமக்கு ஆபத்து என்று இந்தியத் தேசியவாதிகள் நம்பினர். அதுதான் உண்மை. பிராந்தியப் பாதுகாப்புப் பற்றிய தூரநோக்கினையே இந்திய ராஜதந்திரிகளும் இலங்கை அரசும் பலப்படுத்த விரும்பும்.
இந்திய தேசத்தை கடந்த மூன்று தசாப்தங்களில் ஆண்டவர்கள் இரண்டு வகையினர்,
1. இடதுசாரிய எண்ணம் கொண்ட இந்தியத் தேசியவாதிகள்.
2. இந்துத் தேசியத்தை வலியுறுத்தும் இந்தியத் தேசியவாதிகள்.
இதில் முதல் வகைக்கு இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் முதலானவர்கள் உதாரணம். இவர்களது உதவியுடன்தான் இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு வளர்ச்சி பெற்று அதன் எச்சம்கூட இல்லாமல் வேரறுக்கப்பட்டது. இந்த அழிப்புக்கு மூலமாகத் துணை நின்றது மன்மோகன் சிங் தலைமையினால் ஆன காங்கிரஸ் கட்சியும் கருணாநிதி தலைமையில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த திராவிடக் கட்சிகளும். இலங்கையின் இன அழிப்புக்கு இடதுசாரிகளின் பங்குதான் அதிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இரண்டாவது வகைக்கு உதாரணமாக இருப்பது அடேல் பீஹாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திரமோடி. இவர்கள் ஆர்.எஸ்.எஸ் (RSS) தொண்டர்படையில் உறுப்பினர்களாக இருந்து அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சி (BJP) மூலம் மக்கள் ஆதரவு பெற்ற தேர்தல் வழியாகப் பிரதமரானவர்கள். 1998 தொடக்கம் 2004 வரையான காலத்தில் வாஜ்பாயின் ஆட்சி இந்தியாவில் இருந்தது. இவர் ஒரு இந்துத்தேசியவாதி என்பதால் இலங்கை விடயத்தில் தனது பாதுகாப்பு அமைச்சரான ஜோர்ஜ் பெர்ணான்டஸ் மூலம் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க இராஜதந்திர உதவிகளை மேற்கொண்டார். விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) என்ற இந்துத்துவ அமைப்பை தமிழர் பகுதிகளுக்குள் அமைப்பது பற்றிப் புலிகளுடன் பேசினார். இந்த VHP அமைப்பு RSS இன் ஒரு துணைப்பிரிவாகும். ஆனால் எப்போதும் தமிழக- திராவிடத் தற்குறி அறிவுஜீவிகளை நம்பி தமது அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கும் புலிகள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். ஒரு இந்துத் தேசியவாதியாக தமிழர்களுக்கான தீர்வை அப்போதே முன்வைத்தவர் வாஜ்பாய். இதனை ஏற்காத முட்டாள்த்தனம்தான் மக்களின் பேரழிவு. இவ்வளவு இழிவாழ்க்கை. இந்த நுண் அரசியலை இங்கு புரிந்து கொள்ளாத தற்குறிகள் எப்போதும் இந்துத்துவத்தை எதிர்த்துக்கொண்டுள்ளனர். இப்போதுகூட ஆர்.எஸ்.எஸ் அரசியலை இங்கே முன்வைத்ததும் முற்போக்கு என்ற பெயரில் சில வெளிநாட்டு புரோக்கர்களும் முஸ்லிம் அறிவுஜீவி என்ற பெயரில் ஜிகாதிகளை ஆதரிக்கும் கோமாளிகளும் எதிர்ப்பை வெளிடத் தொடங்கியுள்ளனர். இன்றைய அரசியல் யதார்த்தத்தில் வடகிழக்கில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்த இந்துத் தேசியவாதிகள் விரும்புகின்றனர். நிச்சயமாக இது தமிழர்களுக்கான அடையாள அழிப்புக்கும் படிப்படியான தேசிய நீரோட்ட அரசியலுக்கும் தீர்வாக அமையும். இதன்மூலம் சிங்களத் தேசியத்தின் வெறுப்பு அரசியலை மாற்றுநிலைப்படுத்தவும் முடியும். அத்துடன் ஜிகாதியக் கும்பல்களின் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையங்களின் செல்வாக்கை குறைக்க முடியும்.
தற்போதைய மிதவாதத் தமிழ்த்தேசியம் இஸ்லாமியர்களுடன் இணைந்து சென்று தீர்வுகளை முன்வைக்கலாம். ஒன்றிணைந்த வடகிழக்கை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று பகற்கனவையே காண்கிறது. இந்தப் பகற்கனவை வெளிநாடுகளில் இருந்து முகநூலிலும் வேறு வழிகளிலும் காட்டுக்கூச்சல் போட்டு நியாயப்படுத்தி வருகின்றனர். இதன் பின்னால் பணம் வாங்கி தமிழ் அடையாளங்களை அழிக்க நினைக்கும் புரோக்கர்கள் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் தமிழ்த்தேசியத்தை அரசாங்கம் தீர்வாக வழங்காது. அதனை இங்குள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களும் ஏற்கமாட்டார்கள். அதற்கான காரணங்கள்.
1. வடகிழக்கிலுள்ள தமிழ்ப் பிரிவினைவாத அடிப்படை ஊற்றுக்கள் முஸ்லிம்களை இன்றும் பெரும் எதிரிகளாகத்தான் கட்டமைத்துள்ளது. ஒரே மொழி என்று வரும்போது அவர்களைத் துரோகிகள் என்றும் கூறிச்செல்கிறது.
2. இஸ்லாமிய வஹாபிய அடிப்படைவாதம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. இதனை வளர்த்துவிட்டதில் அரசுடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களின் பங்கும் அதிகம். இந்த அடிப்படைவாதம் எந்தத் தேசியத்தையும் ஏற்றுக் கொள்ளாது. சுயவிமர்சனம்கூடச் செய்யாமல் மற்றச் சமூகம் மீது அதிகாரத்தைப் பிரயோகிக்கும்.
3. சர்வதேச அழுத்தங்கள் எவ்வளவு வந்தாலும் இலங்கையுடன் இரண்டாயிரம் வருடம் பண்பாட்டுத் தொடர்பிலுள்ள இந்தியா முன்வைக்கும் தீர்வையே சர்வதேசமும் இலங்கை அரசும் ஏற்றுக்கொள்ளும். இதில் சர்வதேச ரீதியில் எத்தனை காட்டுக்கூச்சலை அங்குள்ளவர்கள் மேற்கொண்டாலும் அது இங்கே இம்மியளவுகூட மாற்றத்தைத் தராது.
4. வடகிழக்கில் இடதுசாரிய மற்றும் தமிழகக் கட்சிசார்ந்த மனநிலையில் மாகாண அரசு அமைவதை எந்தவொரு இந்தியத் தேசியவாதியும் விரும்பமாட்டார் என்பதே உண்மை. இதற்கு கடந்த முப்பது வருட யுத்தமும், யுத்தத்தின் பின்னரான தீர்வு முன்வைப்புக்களும் ஆதாரமாகவுள்ளது.
சிங்கள- தமிழ் ஒற்றுமை என்பதைவிட பௌத்த- இந்து ஒற்றுமையில் பழைய கொலைவெறிக் காழ்ப்புணர்வுகள் மறையத் தொடங்கிவிடுகிறது. பௌத்தம் இந்து மதத்தில் இருந்து விவாதம் செய்தே தன்னை நிலைப்படுத்திக் கொண்டது. இலங்கையிலுள்ள பௌத்தம் இந்துத் தமிழ்ப் பண்பாட்டின் மூலவேராகவே உள்ளதாகும். இதன் தாராளவாத எண்ணங்கள் பரஸ்பர நம்பிக்கையை நம்மிடையே தருகிறது. சிங்களவர்களில் பலர் தமது தவறை ஏற்கின்றனர். ஒருசிலர் ஏற்க மறுக்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் செய்வது போல் ஒருகாலமும் தமது ஜிகாதியப் படுகொலைகளை நியாயப்படுத்தவில்லை. நாம் புலிகளின் படுகொலைகளை கண்டித்த அளவுக்கு முஸ்லிம்கள் வெளிப்படை மனதில் உரையாட வருவதில்லை. வெறும் பசப்புகளையே பேசுவர். ஆகவே பெரும் பான்மை சமூகத்துடன் ஒன்றிணைந்து போகக்கூடிய தீர்வையே பௌத்த தேசியவாதிகளும் விரும்புகின்றனர். இதில் எந்த அடிபணிவும் இல்லை. இது பரஸ்பர அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நல்லிணக்கம். இதனைப் புரிந்துகொள்ளாதவர்கள் இன்னும் நூறுவருடங்கள் ஆனாலும் இப்படியேதான் கூச்சலிட்டபடி இருப்பர்.
இங்கு ஒரு கேள்வி எழுகிறது. வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களுக்கான தீர்வுதான் என்ன என்று. நிச்சயமாக அவர்களுக்கான தீர்வினை அவர்கள்தான் முன்வைக்கவேண்டும். எதனையும் முன்வைக்காமல் ஒன்றையே பேசியபடி இருப்பது எந்தவகையான அரசியல் அனுகூலங்களைச் சமூகங்களுக்கு வழங்கும். அவர்கள் அரசாங்கத்துடன் அமைச்சர்களாகப் பலகாலமாக உள்ளனர். ஒரு முஸ்லிம் என்று அல்ல. அனைத்து முஸ்லிம்களும் எந்த அரசு வந்தாலும் அந்த அரசுடன் சேர்ந்து கொள்கின்றனர் அல்லவா. அப்படியானால் அவர்களுடைய தேர்தல் பிரிவுகளையும் எல்லை நிர்ணயங்களையும் ஒட்டி அரசாங்கத்துடன் சேர்ந்துள்ளவாறே தீர்வுகளை முன்வைக்கலாம். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தமிழர்தான் காரணம் என்று சப்பைக்கட்டுக் கட்டி தொடர்ந்து தமிழர்களைக் குற்றம் சொல்லித் தம்மை உத்தம புருஷர்களாகக் கட்டமைப்பது முஸ்லிம்களின் வாடிக்கை. எனவே இத்தனை வருடம் அரசாங்கத்தில் இணைந்துள்ள உங்களால் ஏன் தீர்வுகளை முன்வைக்கவில்லை. வடகிழக்கு இணைப்பு என்று வரும்போது இரத்த ஆறு ஓடும் என்று கிழக்கிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவர் காட்டுக் கூச்சலிடுகிறார். செய்து காட்டுவோம் என்று இன்னொருவர் அறைகூவலிடுகிறார். ஜமாஅத் அமைப்புக்கள் ஒன்றுகூடி தமிழர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.
அப்படியென்றால் இலங்கை முஸ்லிம்களான நீங்கள் முன்வைப்பது என்ன?. தமிழர்கள் எப்போதும் கண்ணீரையே ருசிக்க வேண்டும் என்றா?. தொடர்ந்து அதிகாரப் பிடியில் இருக்கவேண்டும் என்றா?
இங்கே இந்துக்களை ஒன்றிணைத்து அங்குள்ள சங்பரிவார ஒற்றுமை போல ஆர்.எஸ்.எஸ் அரசியலை பிரிவினைவாதம் இல்லாமல் முன்னெடுக்க முனைகையில் அதனை வெள்ளாள- இந்து எழுச்சி என்று பக்கம் பக்கமாக முஸ்லிம் அறிவுஜீவிகளும் நான்கைந்து தமிழ்ப் புரோக்கர்களும் எந்தத் தர்க்கமும் இல்லாமல் எழுதத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு இப்போதைய தேவை தமிழர்களின் கண்ணீர். இந்தக் கண்ணீரை வைத்து வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கையும் உள்நாடுகளில் சந்தர்ப்பவாத அரசியலும் செய்யவேண்டும். அதற்குத் தினமும் ஒரு தமிழர் இங்கே செத்துக்கொண்டு இருக்கவேண்டும். எதிர்ப்பு அரசியலைச் செய்து புலனாய்வுப் பிரிவினரின் சித்திரவதைக்கு ஆட்படவேண்டும். இந்துக்கோயில் கர்ப்பக்கிரகங்களில் மாட்டிறைச்சிக்கடை வைக்கவேண்டும். தமிழ் அடையாளத்தையே குழிதோண்டிப் புதைக்கவேண்டும். இதைத்தான் தமிழ்த்தேசியவாதிகளும், இடதுசாரிகளும், முஸ்லிம் அதிகார மையங்களும், தமிழக-திராவிட தற்குறிகளும் விரும்புகின்றனர். செய்துவருகின்றனர். இதைத்தானே கடந்த நாற்பது வருடமாகச் செய்தார்கள் என்ற தெளிவு மக்களிடம் ஏற்படும்போது அவர்கள் இந்த அரசியலை உணர்வார்கள்.
இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்ட இந்துத்தேசிய அரசியலின் அவசியத்தைப் பலர் இலங்கையில் உணரத் தொடங்கியுள்ளனர். இது ஒன்றுதான் இங்குள்ள இளைஞர்களை இரத்தம் சிந்த வைக்காமல் தேசிய நீரோட்டத்துக்குள் இட்டுச்செல்லும். மாறாகத் தமிழ்த்தேசியம் பிரிவினையையும் ரத்தக்கூச்சல்களையும் முன்வைத்துத் தமிழரை அழிவுப் பாதைக்குள் கொண்டு செல்லக்கூடியது. அதேநேரம் தமிழ்த்தேசியம் இந்துத் தேசிய அரசியலை ஏற்றுக்கொண்டால் அது ஆரோக்கியமான விடயத்தையே மக்களுக்கு ஏற்படுத்தும். ஆனால் ஏற்கமாட்டார்கள். தமிழக வெறிக்கூச்சல்காரர்கள் விடமாட்டார்கள். தமிழ்நாட்டுக் காரர்களின் கேலிக்கூத்தான விவாதம் ஒன்று உள்ளது. இந்து என்பது தமிழரைக் குறிக்காது. அது சமஸ்கிருதம் பேசுபவர்களுக்கானது. அது வடநாட்டுக்காரர்களுக்கானது என்று. இதுதான் இருப்பதிலேயே ஆகப்பெரிய தற்குறித்தனமான நகைச்சுவை. சரிவரப் படித்த ஒருவன் இதனைக் கேட்டதும் கொலாலென்று சிரித்துவிடுவான். தமிழிலுள்ள 35 வீதமான சொற்கள் சமஸ்கிருதத்தை உள்வாங்கியவை. வடமொழிகலந்தவை. அத்துடன் தமிழ்ச்சொற்கள் பலவும் வேற்றுமொழியில் கலந்துள்ளன. பேசும் மொழிதான் வேறே ஒழிய. நம் பூர்வீகத் தெய்வ வழிபாடுகளின் படி நாம் இந்துக்கள்தான். இந்துத் தேசியம் நமது அரசியலுக்கும் இருப்புக்கும் வலுச்சேர்க்கும். அதனை இங்கே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் என்ற தொண்டர்படைக்கான ஆதரவுகளை நாம் அளிக்க வேண்டும். அது இலங்ஙையின் இறையாண்மைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். அதனை இங்குள்ள தமிழர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
Extra Links
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_42.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_24.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_30.html
https://suyaanthan.blogspot.com/2018/05/blog-post.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_3.html
Extra Links
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_42.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_24.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_30.html
https://suyaanthan.blogspot.com/2018/05/blog-post.html
https://suyaanthan.blogspot.com/2018/04/blog-post_3.html
00
Comments
Post a Comment