கவிதைகளுக்கான மாற்றீடுகள்
கவிதைகளுக்கான மாற்றீடுகள்
●
இலக்கியத்திலிருந்து வழுவிய கவிதைநெறி தமிழில் எந்தக்காலமும் ஏற்கமுடியாத ஒன்றாகவே இருந்து வந்தது/வருகிறது. "ஆத்மாநாம்" இன் கவிதைகளைப் படித்த பிறகு அவர் சிலபல இடங்களில் சித்தாந்தம்-இலக்கியம் தாண்டிய முன்வைப்புக்களைத் தனது கவிதை நெடுகிலும் ஊட்டியுள்ளார் என்பதை அறிய முடிகிறது. இலக்கியத்தினின்று வழுவுதல் என்பது இலக்கியப் பேரிடர் (Literature Mass Periculum) என நிறையப் பேர் நினைப்பதுண்டு. அது அவ்விடயமன்று. பொருளாதாரம், அரசியல், சமூகம் முதலான எதுசார்ந்த விடயங்களை தனியே அதனதன் கூறுகளினின்று அரிந்தெடுத்தால் எப்படியிருக்கும் என்பதேயாம்.
"மீன்களின் கண்கள்
நடுச்சாலையில்
கொட்டிக் கிடக்கின்றன"
"சாக்கடை நீரில் வளர்ந்த
ஒரு எலுமிச்சைச் செடி"
போன்ற ஆத்மாநாமின் கவிதை வரிகள் மிக ஆழமானவை. இலக்கியச் சுவையினின்று விலகி, ஏறத்தாழ சித்தாந்த நெறிகளுக்கு ஆட்பட்டு மனத்தெறிப்பை நமக்குள் உண்டாக்கி விடுகின்றன.
இவர்போன்று கவிதைகளை எழுதுகிறவர்கள் என- சமீபத்திய அவதானிப்புக்களில்
ஒட்டுமொத்தமாகக் காட்டிவிட முடியாது. ஆனால் வடிவங்களினின்று வழுவியுள்ளனர். தனித்த மூலகங்கள் மீதான குவிந்த விழுகை இல்லையென்றே தோன்றுகிறது.
●
சுயாந்தன்.
Comments
Post a Comment