சுயமரியாதை பற்றி....

நீ புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தாய்.
ஒரு பழைய வருடத்தின் இறுதியில் 
புதுவருட வாழ்த்துச் சொல்லியிருக்கிறாய்.

நீ புதிதாகப் பார்த்த "உலக ஊழி" படம்
பற்றிய கதை ஒன்னும் சொன்னாய்.
முன்பனிக் காலங்களில் முகத்தில் படரும் "பொடுகு" பற்றிச் சொன்ன ஞாபகமுமுண்டு.

விமர்சனங்கள் மட்டுமே
உயிர்வாழ்வதாகக் கூறி,
கவிதை எழுதுவதை இத்துடன்
நிறுத்தவும் சொல்லியிருந்தாய்.

நீ எனக்கான ஒரு காகிதநிலவை
உன் கரங்களால் செய்ததாகவும் சொல்லியிருக்கிறாய்.

நீ கடைசிவரை என்னை
நல்லவனென்றும் நம்பியிருக்கிறாய்.
பிறர் கெட்டவன் என்று சொன்னாலும் கேட்டிருக்கிறாய்.

நீ சொன்ன எதையும் நான்
என்றுமே கேட்டதில்லை.
எனக்கு என் சுயமரியாதை
ஒன்றே முக்கியமென்று உன்னை
உதாசீனப் படுத்தியிருக்கிறேன்.

நீ புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டேயிருந்தாய்.

பிறகொரு நாளான இன்று......
கல்லறைக்கு அருகில் ஒரு "பிராமணனை" அழைத்து உனக்கான ஆண்டுப் பூஜை செய்வது பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.....

# "நீயும் என் சுயமரியாதையும்"

Comments

Popular Posts