நெடுந்தூரம் போனவள்.

நெடுந்தூரம் போனவள்.
=======
என் காதலி யாவருக்குமானவள்.
என் காதலி கடவுள் போன்றவள்.
என் காதலி பிசாசு போன்றவள்.
என் காதலி பறவை போன்றவள்.
என் காதலி கடல் போன்றவள்.
என் காதலி என் போன்றவள்.
நான் என் காதலி போன்றவன்.

அவள் எனக்கொரு கவிதை
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு தென்றல் தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு காருண்யம் தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு வானம்
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு சிறகு
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு கனவு
தந்து சென்றாள்.
அவள் எனக்கொரு பூமி
தந்து சென்றாள்.
அவள் எனக்கென பாதிமரணமும் தந்து சென்றாள்.

நெடுந்தூரம் போனவள்,
திரும்பி வரவே இல்லை அவள்.
தேடினாலும் கிடைக்காத அவளைத் தேடி என்னவாகப் போகிறது.

தனிமையில் இந்த நூற்றாண்டை வாழ்ந்து முடிப்போம்.

என்றோ எனக்கெனத் தெரிந்தவள்.
இன்று பொதுவுடமையாகிவிட்டாள்.

சுயாந்தன்.


Comments

Popular Posts