மையினால் எழுதப்பட்ட தியானம்

புத்தனின் சிரிப்பால்
செய்யப்பட்ட இந்தப்
பேனாவின் மையில்
கொஞ்சம் கொஞ்சமாக
எனது கண்ணீரும் சேர்ந்துவிடுகிறது.
காதலியின் முத்தப்
பசைகளும் கலந்துவிடுகிறது.

இப்போது அதற்குள்ளிருந்த
மையினால் எழுதப்படுகிறது புத்தனின் தியானம் பற்றியும்.....
புத்தனின் சிலைகள் பற்றியும்.....
ஒரு நாட்டின் அமைதி பற்றியும்....


சுயாந்தன்

Comments

Popular Posts