வருடத்தின் ஒரு பகுதிக்கான சபதம்.

வருடத்தின் ஒரு பகுதிக்கான சபதம்.

தனியே இருக்கப்
'பயந்து' கொண்டுதான்
நிறையப்பேர் காதலை நாடுகின்றனர்.

புத்தகங்களை விட்டு
வெளியே வரும்போது
என்னையும் 'இந்தப்பயம்'
அடிக்கடி எட்டிப் பார்க்கின்றது.

அதிகபட்சம்
நான் சிறை சென்றால்
அங்கும் புத்தகம் கிடைக்குமாறு செய்துவிடுங்கள் நண்பர்களே!!!

என்ன செய்வது
புத்தகத்தின் நிர்வாணம்.
புத்தகத்தின் மௌனம்
புத்தகத்தின் ஆசைவார்த்தை.
புத்தகத்தின் தழுவல் வாசனை.

காதலியை விடவும்
கால்நூற்றாண்டில்
தவணை முறையில்
நேசத்தைத் தந்து
போதையாய் நெருக்கிவிட்டது.

என்
ஏகோபித்த ரசனைகள்
ஏகாந்தப் பிரியங்கள்
ஆதலால்,
மறுபடியும் புத்தகத்தின் ஒவ்வொரு பூவையும்
தனியே பிடுங்க
வருடத்தின்
முதல் நாளில்
ஆயத்தமாகிக்கொண்டுள்ளேன்..

சுயாந்தன்

Comments