கனவுகளின் வனாந்தரம்.

கனவுகளின் வனாந்தரம்.
=============
கனவுகளின் வனாந்தரத்தில்
நடந்துபோன களைப்பில்
பழைய காதல் கடிதங்களை
வாசித்துக் கொண்டிருந்தேன்.

ஒன்றில் 'முகவரி'
இருக்கவில்லை.
ஒன்றில் 'விழிப்பு'
இருக்கவில்லை.
ஒன்றில் 'முடிவுரை' இருக்கவில்லை.
ஒன்றில் 'பொருள்' இருக்கவில்லை.
ஒன்றில் 'எழுத்துக்கள்' இருக்கவில்லை.
"வெற்று வார்த்தைகள்" அலங்கோலமாக அலைந்தன.

சிரித்துக்கொண்டே,
கனவுகளிலிருந்து மீண்டுவரப் பிரியங்களின்றி,
அந்த வெற்று வார்த்தைகளை முகவரி இல்லாமல் எழுதப்பட்ட கடிதங்களுக்கு
எழுத்துக்களாக
ஒன்று சேர்க்கிறேன்.

கனவு கலைந்த மாத்திரத்தில்,
பழைய காதல் கடிதங்களைத் தேடிப் பார்க்கையில்,
எஞ்சியது;
'பொருள்'
'உருவகம்'
'அமைப்பு'
'கனவுகள்'
ஏதுமே இல்லாத ஒரு கவிதை......

இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.

Comments