பெரியன கேட்டல்.

என்னை நான்
வானமாகப் பாவனை
செய்துகொண்டிருந்தேன்.

புகையிலிருந்தெழுந்த
சீனப்பெருஞ்சுவரின்
தாழிடப்படாத கதவோடைகள்
என்னைநோக்கி வெளிச்சத்தை வீசிக்கொண்டேயிருந்தது.

பாதிச் சூரியனை நிகர்த்த
வான மண்டலம்
என் வானினை நோக்கி
வந்து கொண்டே இருக்கிறது.

நிலவும்,
முகிலும்,
தாரகையும்,
சில பறவைகளும்
என்னிடம் ஏதோ
கேட்டுக்கொண்டேயிருந்தன.

என்னை நான்
நிலவாயும்,
முகிலாயும்,
விண்மீனாயும்,
பறவையாயும்
பாவனை செய்துகொண்டு
பூமியின் ஆழ்துளை வரை
நகரலானேன்.

அங்கும்
ஒருபாதிச் சூரியன்,
வானமண்டலம்,
மற்றும் சில பறவைகள்....

#

Comments