முன்னும்"1983"பின்னும்.

முன்னும்"1983"பின்னும்.
=========
அட்னன் சமியின் 'பிரம்மராஜன்' கவிதைகளை கடல் பிரித்து John Ashbery யிடம் கொடுத்துத் திரும்பிப் பார்க்கத்தான் 'கோணங்கி' எழுதியதும் 'தேவதச்சன்' ஏகோபித்த 'மழையின் பெரிய புத்தகம்' ஞாபகம் வருகிறது. வந்தாலும் Mumbo Jumbo நாவலாண்டில் இருந்து பதினொரு வருடம் கழிந்த ஒரு ஜீலையும் இத்தீவில் உள்ளது. அநேக தருணங்களில் உன்னைத் தட்டியெழுப்பி விடக்கூடிய சில 'நகர்' ஊர்வலங்கள் இன்னுமா உன் 'ஊரில்' நிகழ்கிறது என்று 'ஞானக்கூத்தன்' கேட்டதாக அவரின் 'திண்ணை இருட்டில்' வைத்து எடுக்கப்படாத கையருகே 'Robert Frost' இன் கற்பனைகள் நிழலில் நெருப்பை வார்த்து ஹவார்ட் யுனிவர்சிட்டி கம்மாலை அருகே போட்டன. பட்டம் இல்லாமல் 'ஒரு சிறுவனின் தீர்மானங்களை' கவிஞனாகிவிட்டன சில கைகள்.

'மலைப்புறம்' மாவட்டத்தான் 'வெள்ளம்', 'வாது' போன்ற வார்த்தைகளை சேர மன்னனிடமிருந்து களவாடி கோட்டயம், கோழிக்கூடு, இடுக்கி, ஆலப்புழா, கன்னூர், ஏர்ணாகுளம், கொல்லம், பாலக்காடு, திரிசூர், வயநாடு வரையிலும் மணிப்பிரவாளமாக்கி விட்டான். மூன்று "கேர" இடங்களை மறந்து விட்டாலும் திருவனந்தபுரத்தின் கோயில் யானை கனவில் ஒருபுறம் கல்லணை கட்டிய கரிகாலனைப் பலி இன்னும் கேட்டு நிற்கிறது வர்மா என்ற வீர அரசனிடம். அதனால் அனந்தபுரம் மறக்கவில்லை. யாராவது எடுத்துத் தொலையட்டும் என்னை எரித்துவிட்ட சாம்பலையும், நெருப்பையும். Ismael Reed எங்கிருந்தாலும் கரீபியன் வூடோ (Voodoo)  பற்றிய 'ஜம்போ மம்போ' வை மறு பதிப்பாக்கிக் கொள்ளு. எண்ணிப் பத்து வருடங்களில் ஜீலைக்கலவரம் நிகழ்ந்தே தீராது.....

By:::சுயாந்தன்.

Comments