ஆர்.எஸ்.எஸ்: அடிப்படைப் புரிதல்கள்.

கேஷவ பலிராம் ஹெட்கேவர் தனது நண்பர்களுடன் 1925 ஆம் ஆண்டு இந்த அமைப்பை (Rashtriya Swayamsevak Sangh- RSS) ஆரம்பித்தபோது மிகக் கணிசமான அளவு மக்களின் ஆதரவே இவர்களுக்குக் கிடைத்தது.  பெருமளவு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் இருந்தது. பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்கத் தொடங்கியதும் இந்தியாவின் அநேக பாகங்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவை உணரப்படலாயிற்று. அத்துடன் வட இந்தியாவில் சாதிய வேற்றுமையை இல்லாது ஒழிப்பதற்கு இந்த அமைப்பு மேற்கொண்ட செயற்பாடுகள் மிகக் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும். இதனால் இரண்டு தசாப்தங்களுக்கு உள்ளாகவே வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் பெரும் செல்வாக்குடன் வளர்ந்தது.  இதனை மகாத்மா காந்திகூட தனது ஹரியான் என்ற பத்திரிகையில் பாராட்டி எழுதியிருப்பார். பிற்காலத்தில் நடந்த காந்தி கொலை துன்பியல் சம்பவமாகிப்போனது. ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்பட்டு மீளவும் சமூக எழுச்சிக்காகக் கட்டமைக்கப்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தீண்டாமையை நேரடியாகவே நீக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினார்கள். இதன் பலனை ஆர்.எஸ்.எஸ் இன்று அந்த இடங்களில் அனுபவிக்கிறது. அங்குள்ள இடதுசாரிகளால் செய்ய முடியாத பலவற்றை வலதுசாரி அமைப்பு முன்னின்று மேற்கொண்டது என்பதுதான் இடதுசாரிக் கோட்பாட்டாளர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மீது பெரும் வெறுப்புணர்வை அளித்துள்ளது.  இன்று அங்குள்ள பல மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் வீழ்த்தப்பட்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் நிறுவனம்தான் பாரதிய ஜனதா கட்சி என்ற தெளிவு இங்கு பலருக்கு இல்லை.



பாஜக அமைப்பும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இலங்கைத் தமிழர்களுக்கு விரோதமானது என்ற புரட்டினைப் பலர் இங்குள்ள மக்களிடம் ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இங்குள்ள தமிழர்கள் சிலர் அறியாமை காரணமாகப் பாஜக அமைப்பை வெறுக்கின்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஆதரிக்கின்றனர் என்பதுதான் இங்குள்ள அடிப்படையான முரண். இதனைப் பற்றிய சிறிய ஒரு விளக்கத்தை இங்கே நான் தருகிறேன்.
பாஜக கட்சி இன்று வரையும் மூன்று தடவைகள் இந்தியாவில் ஆட்சிபீடம் ஏறியுள்ளது. துரதிஷ்டவசமாக 1996 இல் வெறும் பதின்மூன்று நாட்கள் ஆட்சியில் இருந்தனர். அடுத்து வந்த 1998-2004 காலப்பகுதியில் ஆறுவருடம் அடேல் பீஹாரி வாஜ்பாய் இந்திய நாட்டை ஆண்டார். வாஜ்பாய் ஆரம்பகால ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராவார். இஸ்ரேலில் ஆட்சியாளராக வருவதற்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல பாஜகவில் ஆட்சிபீடம் ஏற ஆர்.எஸ்.எஸ் தொண்டர்படையில் இருந்திருக்க வேண்டும். 

வாஜ்பாயின் காலத்தில் இந்திய தேசத்திற்குள் ஊடுருவிய இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் வாஜபாய் அரசால் தேடித்தேடி அழிக்கப்பட்டனர். குண்டு வைத்த ஜிகாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானிய ராணுவம் செய்யும் அட்டூழியங்களைக் கார்கில் போர் நடாத்தி அடக்கினார். ரஷ்ய-அமெரிக்கப் பேரரசுகளுடன் மிகப்பெரும் பொருளாதார அபிவிருத்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்தியாவில் அணுகுண்டையும் முதன்முதலில் பரிசோதித்து வெற்றிகண்டார். மதமாற்றம் நடக்கும் இடங்களுக்கு அவராகவே சென்று மக்களுடன் உரையாடினார். உதாரணமாக தமிழ்நாடு மீனாட்சிபுரம் மதமாற்றம். அகில இந்திய மட்டத்தில் மக்களைப் பெருமளவில் ஈர்த்த இந்தியத் தலைவர் வாஜ்பாய் எனலாம். இந்தியத் தேசம் கண்டடைந்த மகத்தான தலைவர்களில் ஒருவர் என்றும் கூறலாம். இவர் ஏனைய வட இந்தியத் தலைவர்களைவிட இயல்பிலேயே தமிழர்களுடன் நெருங்கிப் பழகக்கூடியவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் சின்னம்மை என்ற முதியபெண் ஏழைகளுக்கான வங்கி நடைமுறையொன்றை ஆரம்பித்து வைத்தார். அப்பொழுது அந்தத் தமிழ் மூதாட்டியின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார். மிகப்பெரும் கௌரவத்தை அவருக்கு விருதுமூலம் அளித்தார். அப்பொழுது அவர் பிரதமராக இருந்தார். வாஜ்பாயின் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னான்டஸ் என்பவர் மூலம்  இலங்கைத் தமிழர்களுடைய நலன்களில் அக்கறை காட்டினார். 




இந்தக்காலப்பகுதியில் இலங்கையில் சமாதான நடைமுறை அமுலில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில்தான் இங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) என்ற அமைப்பு ஒரு குழுவை அனுப்பி புலிகளுக்கு  இங்கே ஆதரவு அளிப்பதற்காகவும் தங்களது அமைப்பை இங்கே செயற்பட அனுமதிக்குமாறும் கோருகின்றனர். ஆனால் புலிகள் தமிழ்நாட்டின் நலம் கருதியும் இடதுசாரிகளின் மீதான அதீத நம்பிக்கையாலும் மூடத்தனமாக அதனை மறுத்துவிட்டனர். அதன் பெறுபேறுகளைத்தான் பிற்காலத்தில் மொத்தத் தமிழர்கள் அனுபவித்தனர். லட்சக்கணக்கான மக்கள் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். ஆரம்பம் தொட்டே புலிகளின் இந்திய நடைமுறை திராவிட- இடதுசாரியச் சார்பாகவே இருந்தது. இந்த மடமைத்தனம் புலிகளையும் தமிழர்களையும் இந்திய இந்து மக்களிடமிருந்து ஒதுக்கி வைத்தது. தாங்கள் இடதுசாரியா வலதுசாரியா என்ற குழப்பமே புலிகளைப் பிறரிடமிருந்து அந்நியப்படுத்தியது. ஏதாவது ஒன்றில்தான் இருக்கமுடியும் என்ற தெளிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எனலாம். புலிகள் இடதுசாரிகளா வலதுசாரிகளா என்பது மிகக் குழப்பமாக வெளியிலிருந்து பார்ப்பவர்களால் இப்போதும் உணரப்படுகிறது.

தற்போது இங்குள்ள சில இடதுசாரியக் கோமாளிகள் புலிகள் செய்த அதே தவறை மீளவும் மேற்கொள்கின்றனர். இஸ்லாமிய அடிப்படைவாதிகளை எளிமையாக எடைபோடுகின்றனர். இந்த நாட்டைத் துண்டாடுவதற்கு இப்போதைய யதார்த்தத்தில் அனுமதிக்க முடியாது. மிக நீண்ட யுத்தத்தை எதிர்கொண்ட தமிழர்களை மீளவும் யுத்தச் சகதிக்குள் ஆழ்த்தமுடியாது. ஆனால் அடையாளங்களும் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் இந்துத்துவ அமைப்பின் தேவை இங்கே அவசியமாகிறது. முஸ்லிம் அடிப்படைவாதிகளின் அட்டூழியங்களும் முஸ்லிம் அதிகார மையங்களின் இந்துவிரோத நடவடிக்கைகளும்  தற்போது இங்கு அதிகமாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இந்துக்கோயில்களை அழித்து மாட்டிறைச்சிக் கடையும் சந்தையும் அமைத்ததுபோல் வடக்கில் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்க முனைகின்றனர். இதற்கான எதிர்வினையை முல்லாக்களுக்கு வழங்கி இந்துச் சமூகத்தின் சமதர்மத்தைப் பாதுகாக்க வேறு அமைப்புக்கள் இங்கு இல்லை என்றே சொல்லலாம்.


இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேவை அண்மைக்காலமாகப் பலரால் உணரப்படுகிறது. குறிப்பாக இந்துப் பிரதேசங்களில் இந்து மத அடையாள அழிப்பை மேற்கொண்டுவரும் இஸ்லாமிய அதிகாரங்களை எதிர்ப்பதற்கான அமைப்பாக இதனை இங்கே கட்டமைக்கவேண்டிய ஏற்பட்டுள்ளது. எல்லோரும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் வடகிழக்கில் பரவுகிறது என்று கூக்குரல் போட்டபடி இருக்க ஒரே மொழியைப் பேசுகிறோம் என்ற பெயரில் இந்துத்தமிழ் அடையாள அழிப்பை மெதுவாகவே இஸ்லாமியத் தலைமைகள் மேற்கொள்கின்றன. இவற்றுக்கான எதிர்வினையை வழங்க இங்கே தமிழர்களுக்கென்ற எந்தவொரு அமைப்பும் உறுதியாக இல்லை. இதனால் பல இடங்களில் மிக இலகுவாகவே இஸ்லாமிய அடிப்படைவாதம் தனது அரச அதிகாரத் துணையுடன் உள்நுழைந்துகொண்டு இருக்கிறது. இங்கே அனைவரும் உற்று நோக்கவேண்டிய விடயம் முஸ்லிம்கள் எப்போதும் தங்களது தவறுகளை ஏற்றுப் பேசியவர்களாக இருந்தது இல்லை. பிறர் மீது அனைத்துப் பழியையும் போட்டுவிட்டு தங்களை உத்தமர்களாகவே தொடர்ந்து கட்டமைக்கின்றனர். இதற்கான பிரச்சாரம் அண்மைய இணைய முகநூலிலும் அறிவுஜீவிகள் என்ற பெயரிலும் மேற்கொள்ளப்படுகிறது.

கேரள வன்முறை அரசியலுக்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ் என்று பலர் பிரச்சாரம் செய்கின்றனர். 1985ஆம் ஆண்டுதான் ஆர்.எஸ்.எஸ் கேரளத்தில் காலூன்றுகிறது. அதற்கு முன்பாகவே அங்கே கம்யூனிஸ்டுகளும் முஸ்லிம் லீக் கட்சியும் சண்டையிட்டபடிதான் உள்ளனர். அந்தச் சண்டைகளில் பல கம்யூனிஸ்டுகள் முஸ்லிம்களாலும் முஸ்லிம்கள் கம்யூனிஸ்டுகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த நூற்றாண்டில் சோவியத் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் அவர்களின் கம்யூனிச அரசு செய்த கொலைகளின் எண்ணிக்கை ஹிட்லருக்கு அடுத்த இடத்திலுள்ளவை. மத்திய கிழக்கிலும் அய்ரோப்பிய நாடுகளிலும் முஸ்லிம் ஜிகாதிகள் செய்யும் வன்முறைகளை கடந்த  அய்ந்து நூற்றாண்டுகளில் யாருமே செய்தவரில்லை. இவர்களுடைய அடிப்படையான அம்சங்களை சர்வாதிகார வன்முறைகள் மூலம் பிற தேசியங்கள் மீது நடத்துவார்கள். சமயம் கிடைக்கும்போது அவற்றை நியாயப்படுத்தியும் பேசுவார்கள்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பெருமளவில் மேற்கொண்டது எதிர்வினைகளைத்தான். அதனால் வட இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றுமான பெரும்வன்முறைகளாக மாறிப்போனது. உதாரணமாக குஜராத் கலவரம்கூட கோத்ராவில் அறுபது இந்துக்களை முஸ்லிம் ஜிகாதிகள் தீயிட்டு எரித்தபிறகுதான் தொடங்குகிறது. கோயம்புத்தூரில் ஜிகாதிகள் குண்டுவைத்தபோது எழுபது இந்துக்கள் இறந்தார்கள். இதனை வைத்தவர்கள் அல் உம்மா என்ற இஸ்லாமிய அமைப்பினர். இதனைத் தடைசெய்தார்களா இல்லையா என்றே தெரியவில்லை. அதனுடைய தலைவர் விடுதலை செய்யப்ப்டுள்ளார் என்று அறியமுடிகிறது. இந்த அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ்நாட்டில் ஜவாகிருல்லா ஆரம்பித்த கட்சிதான் மனிதநேய மக்கள் கட்சி. இப்போது தமிழ்த் தேசியத்துடனும் திரவிடக் கட்சிகளுடனும் இயங்கி வருகின்றனர். திராவிடக் கட்சியினரும் அடிப்படைவாதத்தை எதிர்த்தால் அவர்களுக்கும் கோயம்புத்தூர் நிலவரம்தான் ஏற்படும் என்பதே உண்மை.

இந்தியாவில் இரண்டு முறைகளில் இஸ்லாம் பரவியது.
1. படையெடுப்புக்களால் உண்டான மதமாற்றங்கள்.
2. வணிக நோக்குடன் வந்தவர்களால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பரவலாக்கம்.

படையெடுப்புக்களால் உண்டான மதமாற்றங்கள் வட இந்தியாவிலும் வணிக உறவுகளால் உண்டான பரவலாக்கம் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டது. படையெடுப்புக்களால் வந்த முஸ்லிம்கள் தங்களை அடிப்படை வாதிகளாக நிலைநிறுத்தி இந்துச் சமூகத்தை வட இந்தியாவில் அழித்தார்கள். ஆனால் தமிழ்நாட்டிலிருந்த முஸ்லிம்களில் அநேகரின் மனதிலை அப்படி அமையவில்லை. இவர்கள் தமிழர்களுடன் இணைந்து போவதையே விரும்பினர். ஆனால் வஹாபிஸம் என்ற கருத்து உலகம் முழுமைக்கும் பரவத் தொடங்கியதும் தென்னிந்திய முஸ்லிம்களில் அநேகரின் மனநிலையும் மாறத்தொடங்கியது. மாற்றுச் சமூகத்தை அழிக்கத் தலைப்பட்டு இயங்கத் தொடங்கினார்கள். மூலைக்கு மூலை ஜமாஅத் அமைப்பினர் உருவானார்கள். இந்தத் தொடர்ச்சி இலங்கை வரைக்கும் பரவியுள்ளது. தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் கிளை ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் என்று உருவாக்கப்பட்டது. இதற்கு ரவூப் ஹக்கீம் தவிர்ந்த அநேக முஸ்லிம் அமைச்சர்கள் ஆதரவு வழங்கினர். மாற்றுச் சமூகங்கள் மீது காழ்ப்புணர்வு பேச்சுக்கள் அரங்கேற்றப்பட்டன. இவற்றை இவர்கள் தமிழில் பேசும்போது எதிர்வினைகள் ஏற்படவில்லை. அப்பாவி முஸ்லிம்கள் ஜமாஅத் அமைப்பின் அடிப்படைவாதத்தில் மூழ்கினார்கள். இதனையே காலப்போக்கில் சிங்களத்தில் உரையாடல்களை ஜமாஅத் அமைப்பினர் மேற்கொள்ளும்போது சிங்கத் தேசியவாதிகள் கொதித்தெழுந்தனர்.



இதன் விளைவுதான் பொதுபல சேனா, ராவண பலய மற்றும் சிஹலே போன்ற பௌத்த சிங்கள அமைப்புக்களின் தோற்றமாகும். இலங்கையில்  பௌத்த நிறுவனமயத்தின் செல்வாக்கை அறியாமல் ஜமாஅத் அமைப்பினர் புத்த பெருமான் மீது மோசமான வசைகளைப் பொழிந்தார்கள். பிக்குகளை அவமதித்தார்கள். இதன் விளைவுதான் முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கமை மற்றும் கண்டிக் கலவரங்கள். 

தமிழ் இனவாதம் தலைக்கேறியபோது எப்படி சிங்கள இனவாதமும் வளர்ந்ததோ அதுபோல இஸ்லாமிய மதவாதம் பெருகும்போது பௌத்த மதவாதமும் பெரு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போது பௌத்த நிறுவனமயத்தின் பெருவளர்ச்சியை தென்கிழக்காசியாவில் எந்த நாடுகளிலும் காணமுடியாது. நீண்டகாலமாகவே ஜமாஅத் அமைப்பினர் இந்துத் தமிழர்கள் மீதும் வசைகளைப் பொழிந்து வந்தனர். அமைச்சு ஆதரவுடன் இஸ்லாமிய மயமாக்கத்திலும் ஈடுபட்டனர். இதனை ஒருகட்டத்துக்கு மேல் ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட பல நடுநிலை இந்துக்கள் இந்துத்துவர்களாக மாறியுள்ளனர். அல்லது இஸ்லாமிய விரோதிகளாக மாறத்தொடங்கியுள்ளனர். எனக்குத் தெரிய சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதலை தமிழ் மொழி மீதான தாக்குதலாக நினைத்துப் பேசிக் கண்டித்த இந்து நண்பர்களைக் கண்டுள்ளேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த நிலைமை மாறி வருகிறது. இதற்கு முழுக் காரணம் இஸ்லாமிய அடிப்படைவாதமாகும். நாற்பது வருடங்களுக்கு முதல் இந்தநாட்டில் முக்காடு அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் அபாயா அனியும் அடிப்படைவாத முறைமையை இங்கு கொண்டுவந்தவர்கள் இந்த வஹாபியர்கள்தான்.



இந்த நாட்டுக்கு என்று இருக்கும் பொதுவான கலாசாரங்களை விடுத்து தனித்த அடையாளக் கலாசாரங்களை உண்டாக்கி மாற்றுச் சமூகங்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் பணிகளையே தற்போதைய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மேற்கொள்கின்றனர். இந்த நடைமுறை மிகப்பெரிய பண்பாட்டு மோதல்களையே தோற்றுவிக்கும் என்பது வெளிப்படை. உலகம் முழுமைக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு பரவியுள்ள இந்த நேரத்தில் அதனைத் தணிப்பதற்கு சவுதி இளவரசர் கூறிய அபாயா நீக்க அறிவிப்பைக்கூட ஏற்றுக்கொள்ளாது சல்மானைக் கொலை செய்யவேண்டும் என்று இங்குள்ள முல்லாக்கள் குதிக்கிறார்கள். இந்த அடிப்படைவாதத்தை நீண்டகாலமாக அவதானித்து வந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் இவர்களுடைய அதிகாரச் சக்திகளின் துணையுடன் மாபெரும் அடையாளச் சிக்கல்களை இலங்கையில் மூவினங்களிடையே தோற்றுவிக்கப்போகின்றனர்.  இந்த அடிப்படைவாதத்தில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இங்குள்ள இந்து அமைப்புக்களை ஒருங்கிணைத்துச் செயற்பட வேண்டும். அந்த ஒருங்கிணைவுக்கு பேரமைப்பு ஒன்றின் பக்கபலம் தொடர்ந்து இருக்கவேண்டும். அதற்குச் சரியான அமைப்பாக முன்மொழிவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பையாகும். அவர்கள் வன்முறையைத் தோற்றுவித்தார்கள் என்பதைத்தாண்டி இந்துத் தேசிய ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, பண்பாட்டு அடையாளப் பாதுகாப்பு என்று பல களப்பணிகளைச் செய்கின்றனர். தமிழர்கள் தனிநாடு என்பதைத் தாண்டி அடையாள அழிப்பில் இருந்து தம்மைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டுக்கு தற்போது ஆட்பட்டுள்ளனர்.

ஆர். எஸ். எஸ் அமைப்பைப் பற்றி மகாத்மா காந்தி கூறியது இதுதான்:
"ஆர்.எஸ்.எஸ் நன்கு கட்டமைக்கப்பட்ட கட்டுக்கோப்பான ஓர் அமைப்பு. அதன் ஆற்றலை இந்தியாவின் நலன்களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பயன்படுத்த முடியும். அதற்கு எதிராக மதவெறியைத் தூண்டுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தங்கள் நடவடிக்கை மூலம் நிரூபிப்பது அவர்கள் பொறுப்பு.  கட்டுப்பாடும் சாதி வேறுபாடு பார்க்காத தன்மையும் ஆர்.எஸ்.எஸ் உடைய சிறப்பம்சங்களாகும்."
To Members Of the R.S.S
Harijan, 28-September-1947.

பூகோள அரசியலைச் சரியாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தவேண்டிய தேவை நமது சமூகத்துக்கானது. அதை விடுத்து ஈ.வே.ராமசாமி, கம்யூனிசம், இடதுசாரியம் மற்றும் திராவிடம் என்று கூச்சல் போட்டால் இன்னுமொரு முள்ளிவாய்க்கால்தான் எஞ்சும்.  இலங்கைத் தமிழர்கள் சிந்திப்பதற்கான நேரம் இது.

குறிப்பு: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்றைய உலக ஒழுங்கில் எந்த நாடுகளாலும் தடைசெய்யப்படாத தொண்டர்படையாகும். இதன் செல்வாக்கு அண்மைக்காலமாக இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகளின் அரசியலைத் தீர்மானிக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது.

00

Comments

Popular Posts