இந்துக்களைப் பிரித்தாள்தல்.

என்னிடம் பேசும்போது ஒருவர் கூறினார். (அவர் திராவிடப் புத்தகங்களை மட்டுமே படித்தவர்) நீங்கள் எதற்காக இங்கே இந்து மதத்தையும் அதன் காவலர்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் ஆதரிப்பது போலப் பதிவுகளை எழுதுகிறீர்கள். அந்த அமைப்பு பிராமணர்களுக்கு மட்டுமே சார்பான ஜாதிக் கட்சி அல்லவா? என்றார். அத்துடன் இங்குள்ள கோயில்களில் பிராமணர் தவிர்ந்த யாருமே கோயில் பூசாரி ஆகமுடியாது என்ற தற்குறிக் கருத்தையும் முன்வைத்தார்.  கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற மூடத்தனத்தில்தான் நானும் இருந்தேன். பிறகு இங்குள்ள கோயில்களில் பூஜை மேற்கொள்பவர்களிடம் பேசிய பிறகுதான் அவர்கள் யாரும் பிராமணர் அல்ல என்ற தெளிவு கிடைத்தது. அதன்பிறகு திராவிட நூல்கள் மட்டுமன்றி பொதுவான நூல்களையும் கற்று ஒரு முடிவுக்கு வந்தேன். அந்த முடிவு  திராவிடம் என்பது போலியான நம்பிக்கை. இந்தியர்களைப் பிரிக்க வெள்ளையர்கள் உண்டாக்கிய அபத்தச் சொல். அந்த அபத்தங்களை உண்மையென்று நம்பிய பலரை இங்கு எனக்குத் தெரியும். இன்றும் நம்புகின்றனர். இப்படி ஏராளம் மாயைகளை இங்குள்ள பலருக்குத் தமிழ்நாட்டின் வழிவந்த திராவிட மூடர்களால் மூடக் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது. இப்படிக் கேட்பவர்களை  இங்குள்ள கோயில்களுக்குக் கூட்டிச் சென்று நீங்கள் என்ன ஜாதி? பிராமணரா? என்று கேட்க வைக்கும் பாசிச இனவெறியை மூட்டியது ஈ.வே.ராமசாமியும் திராவிட மூடர்களும்தான். இவற்றை இன்றும் பற்றிப் பிடித்துக்கொண்டு வாதாடுவது எவ்வளவு பெரிய அபத்தம்.



இதனை இன்றுள்ள இணையச் சந்ததி இலகுவாக நம்பிவிடுகிறது. இன்றைய இணையச் சந்ததி நம்பக் காரணம், இணையத்தின் பெரும் பகுதியாக இந்துத்துவத்தையும் இந்து மதத்தையும் எதிர்ப்பவர்கள் கிறிஸ்த்தவ-இஸ்லாமிய நபர்கள்தான். அவர்கள் தமக்கான பக்கம் வைத்து அவற்றை வழிநடத்துகின்றனர். இவை அனைத்தையும் நம்பிய இந்து இளைஞர்கள் அவற்றை உரையாடலுக்கு எடுக்கின்றனர். அதனை ஆழ்ந்த பரிசோதனை இன்றி நம்பிக்கொண்டு இந்துமதம்மீது வசைபொழிகின்னர். இதன் விளைவுகளை முறியடிக்க இங்கே பல நடுநிலை இந்துக்கள் இந்துத்துவத்தின் பக்கம் செல்கின்றனர். அவர்கள் அச்சம் கொண்டு தமது பண்பாடுகளைக் காப்பாற்ற அதுதான் வழி என்று நம்புகின்றனர். உண்மையைச் சொன்னால் அந்த வழியை எந்த ஒரு உண்மையான இந்துவும் பின்பற்றுவது தவறென்று கூறமாட்டேன். ஆனால் வன்முறை அரசியலை மேற்கொள்வது தவறு. அண்மைக் காலங்களில் ஆர்.எஸ்.எஸ் தனது வன்முறை அரசியலைக் குறைத்து மேலெழுந்து வருகிறது. இதனை நாசமாக்க சிறிய சிறிய சம்பவங்கள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன.

அண்மையில் இன்னுமொரு முஸ்லிம் நண்பர் என்னிடம் கேட்டார். இந்துக்கள் வேறு. தமிழர்கள் வேறு அல்லவா?. நீங்கள் ஏன் இந்து மதத்தைப் பின்பற்றுகிறீர்கள். திராவிடம் தானே தமிழர்களின் இனவழி என்றார். சிறுதெய்வ வழிபாடுகளைத் தானே தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் உறுதிபடக் கூறினார். அவருடைய பிரித்தாளும் தந்திரத்தை உணர்ந்து கொண்ட நான் கூறியது இதுதான். தமிழின் பக்திமரபுக் காலகட்டத்தில் இந்துக்கள் என்ற ஒற்றுமை கட்டமைக்கப்பட்டுவிட்டது. இதனைத்தான் பிற்காலத்தில் வட இந்திய இயக்கங்கள் பெருமளவில் மேற்கொண்டன. அத்துடன் சோழர்காலம் இந்துக்கள் என்ற நோக்கில்தான் தனது கட்டுமானங்களை தென்கிழக்காசியாவில் விஸ்த்தரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் சோழன் கட்டிய கோயில்களும், தமிழகக் கோயில்களும் இலங்கைக் கோயில்களும் ஒரே சிற்பமரபு கொண்டவை. அவை இந்திய சிற்பக்கலை மரபில் கட்டப்பட்டவை. அவற்றைத் திராவிடக் கட்டடக்கலை என்று பிற்கால ஆராய்ச்சியாளர்கள் பிரித்துள்ளனர். இவற்றைப் பொய்யென்று நிறுவி மீளக் கட்டியெழுப்பும் பணியைத்தான் பலர் மேற்கொள்கின்றனர்.
அத்துடன் இங்கே கம்யூனிசம், பெரியாரியம் என்று வரும்போது இந்துக்களை அதனைப் பின்பற்றச் சொல்லும் நீங்கள் ஏன் அவை ஒன்றையும் செவிமடுப்பதில்லை. உங்களது ஏகத்துவ இறைவனைத்தானே மேன்நிலைப் படுத்துகிறீர்கள். பிறகெதற்கு இந்துக்களைப் பிரிந்தாண்டு உங்களது அரசியலை இங்கே மேற்கொள்கிறீர்கள் என்று மிக மரியாதையாக அந்த இஸ்லாமிய இளைஞரிடம் கேட்டதும் அதற்கான உரையாடலை அவர் அத்துடன் நிறுத்திவிட்டார்.

இதே போன்றதொரு தன்மைதான் இலங்கையின் வடகிழக்கு இந்துக்களின் மனநிலையிலும் பிரித்தாள்பவர்களின் சூட்சும எழுத்துக்களிலும் அடங்கியுள்ளது. எப்பொழுதெல்லாம் தமிழர்கள் இந்துக்களாக எழுச்சி கொள்கிறார்களோ, அப்போதெல்லாம் சைவ-வெள்ளாள எழுச்சி என்று சாதியப் பிரிவினை மூட்டப்படுகிறது. இந்தச் சாதியப் பிரிவினையை இடதுசாரிகளும், முஸ்லிம் அறிவுஜீவிகளும், கிறிஸ்த்தவ மிஸனரிக் காரர்களும் மூட்டுகின்றனர். இலங்கையில் ஆறுமுகநாவலர் மறைந்த பல தசாப்தங்களின் பிறகு இந்துமதம்  அரைநூற்றாண்டுகளாக இடதுசாரிய- திராவிட பாதிப்புக்கு ஆட்பட்டிருந்தது. இந்தப் பாதிப்பால் இலங்கையின் சிங்களவர்களுடன் சிறுகச் சிறுக முற்றிய மொழிப் பிரச்சனை பாரதூரமான மக்கள் அழிவில் வந்து நின்றது. இந்த அழிவுக்கு மூலகாரணம் இடதுசாரியச் சிந்தனைகளின் வளர்ச்சிதான். இதனைப் பெருமையுடன் கூறித்திரியும் குருவிமண்டைகளைப் போன்ற அறிவற்ற குழப்பவாதிகளை இங்கே காணமுடியாது. இப்போதும் உரிமை என்ற பெயரில் நாட்டைப் பிரித்து ஏதாவது செய்யலாம் என்று தமிழ்நாட்டுத் திராவிடவாதிகளின் மனநிலையிலிருந்து யோசிக்கிறார்கள். இரண்டாம் உலக மஹா யுத்தம் முடிந்த பிறகு அங்கிருந்த சிந்தனைகள், தேசியம் பற்றிய கடப்பாடுகள் முற்றாக மாறியது. ஆனால் இங்கே இன்னமும் பிரிவினைவாதம் பேசித் தமது அடையாளங்களைத் தொலைத்தபடி உள்ளனர்.  இவர்களது சிந்தனையில் பிரிவினைவாதமும் ரத்தப் பழிவாங்கல் உணர்வும் மையங்கொண்டுள்ளது.
இவற்றை இங்கிருந்து மாற்றுநிலைப்படுத்தி இஸ்லாமியமயமாக்கப்படும் இந்துத் தமிழ் நிலங்களையும் தக்கவைக்க வேண்டும் என்றால் இந்துக்களாக ஒன்றிணைந்தால்தான் உண்டு. இந்த ஜனநாயக ஒற்றுமை இந்து சமூகத்தின் எழுச்சிக்குக் காரணமாக இருக்கும்.

பொதுவாக இந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய, கிறிஸ்த்தவ, பௌத்த மதங்கள் அனைத்தும் நிறுவனமயப்பட்டுத் தமது சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை அந்த மதங்களின் மூலம் மேற்கொள்கிறார்கள். ஏன் அரசியல் செயற்பாடுகள்கூட மதங்களின் வழியே நடக்கிறது. தம்முடைய மதத்தவர்களுக்கு ஆத்மார்த்தமான சேவையைச் செய்கிறார்கள். பௌத்தம் தவிர ஏனைய இரண்டு மதங்களும் இங்கே மதமாற்றத்தையும் நிகழ்த்தி வருகிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களை இலங்கையின் இறையாண்மை பாதிக்காதபடி இந்துக்களுக்கான தனித்துவத்தைப் பேணவும் முஸ்லிம் அதிகார மையங்களால் நிகழ்த்தப்படும் காணி அபகரிப்புக்களையும் தடுப்பதற்காகவும் ஆதரித்து அவர்களை ஏற்கிறோம் என்றதும் இங்குள்ள இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர். கடுமையான எதிர்ப்புக்களைப் பதிவு செய்து இந்துப் பயங்கரவாதி என்கின்றனர். இங்கு இவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய விடயம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த ஒரு நாட்டாலும் தற்போது தடைசெய்யப்படவில்லை. அதே நேரம் தௌஹீத் ஜமாஅத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளுக்கு இலங்கையின் முஸ்லிம் அதிகார மையங்களால் பச்சைக்கொடி வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனக்குத் தெரிந்து ரவூப் ஹக்கீம் தவிர்ந்த ஏனைய அனைத்து  இஸ்லாமிய அரசியல்வாதிகளும் இந்த ஜமாஅத் போன்ற அமைப்புக்களை  ஆதரிப்பவர்கள்தான். ரவூப் ஹக்கீம் போன்ற இஸ்லாமிய மிதவாதிகளை அப்புறப்படுத்தவே  ஜமாஅத் அமைப்பு இங்கே கடுமையாக உழைக்கிறது. அப்பாவி முஸ்லிம்களின் அழிவில் குளிர்காணவே இவர்கள் துடிக்கின்றனர். அந்த அழிவு இவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு அவசியமாகவும் உள்ளது. மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மரணத்துக்குப் பிறகு இஸ்லாமிய சமூகத்தை அடிப்படை வாதங்களுக்குள் செல்லவிடாது சமூகங்களிடையேயான பதட்டங்களைத் தணிப்பவராக ஹக்கீம் இருந்து வருகிறார். நானறிந்த வரையில் இலங்கையிலுள்ள ஒரே இஸ்லாமிய மிதவாதி ஹக்கீம்தான். 



அந்த மிதவாதத்தை விரும்பாத அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புக்கள் ஏனைய அதிகார மையங்களின் துணையுடன் அவரை எப்படியும் தூக்கி எறிய வேண்டும் என்று துடிக்கிறார்கள். ஹக்கீம் அவர்களின் வீழ்ச்சி இஸ்லாமிய மிதவாத சமூகத்தின் வீழ்ச்சி என்று நிச்சயமாகக் கூறமுடியும்.
இதே போக்கைத் தமது சமூகத்துக்குள் நடாத்திவிட்டுப் பிற சமூகங்கள் மீது அதிகாரத் துணையுடன் இவர்கள் நடாத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக அதிகாரத்திலுள்ள பலர் இவர்களுக்கு ஆதரவு வழங்கி ஊக்குவிக்கின்றனர். அத்துடன் திராவிடக் கருத்தியல் கொண்டு இந்துமதம் என்பதே அபத்தமானது தமிழர்களுக்கானது அல்ல என்று பிளவுபடுத்துகின்றனர்.

தமிழகத்தில் திராவிடக் கட்சியினராலும் இடதுசாரிகளாலும் இந்துக்களைப் பிரிப்பதற்குப் பின்னப்பட்ட வலைதான் பிராமணியம். பிராமண எதிர்ப்புடன் சேர்த்து இந்துமதத்தையும் நிராகரிக்கச் செய்தார்கள் திராவிடக் கட்சியினர். இதே போன்ற முறையில்தான் தற்போது இலங்கையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக இந்துக்களின் சமூக ஒன்றிணைவை வெள்ளாளச் சமூகத்தின் எழுச்சியாகப் பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்துக்களிடையே சாதிய அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துவது இந்துமதத்தினர் அல்ல. இந்து மரபையே அழிக்கத் துடிக்கும் திராவிட-கம்யூனிஸ ஆய்வாளர்களும், முஸ்லிம் அறிவுஜீவிகளும்தான். இங்கே  முஸ்லிம் அதிகார மையங்களின் அடையாள அழிப்புக்கு இடதுசாரிகளும் துணைபோகின்றனர் என்பதை மிகத் தாமதமாகவென்றாலும் உணர்ந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

இது தொடர்பான இணைப்புக்கள்:





Comments

Popular Posts