அயோத்திதாசப் பண்டிதர்.

நவீனத் தமிழின் முதல் தத்துவச் சிந்தனையாளர் அயோத்திதாச பண்டிதர். ஒடுக்கப்பட்ட தலித்திய மக்களுக்காகத் தனது சிந்தனைகளை வடிவமைத்தவர். அயோத்திதாசரின் ஆய்வுக்கட்டுரைகள் தமிழின் நவீன உரைநடைக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆய்வையும் தமிழின் மரபார்ந்த இலக்கியங்களில் இருந்தும் வரலாற்று நோக்கிலும் ஆழ்ந்து முன்வைத்த இவருடைய கருத்துக்கள் மிக மிக முக்கியமானவை.
தலித்துக்கள் தங்களது பிறப்பாலும் மரபாலும் குணத்தாலும் இழிந்தவர்களல்ல. அவர்கள் மண்ணின் மைந்தர்கள்.  பூர்வ பௌத்தர்கள். பௌத்த மதத்தின் வீழ்ச்ஙிக்குப் பிறகு அவர்களுடைய நிலம் பிடுங்கப்பட்டு ஒடுக்கப்பட்டு வீழ்ச்சியடைந்தார்கள். இதைத்தான் அயோத்திதாசர் தனது ஆய்வுகளில் ஆதாரங்களுடன் முன்வைத்து எழுதியுள்ளார். ஈவேரா பிற்காலத்தில் விளாசித்தள்ளியவை அயோத்தி தாசரிடம் பெற்றவையாகும். ஈவேரா வெள்ளையர்களிடம் மண்டியிட்டார். ஆனால் அயோத்திதாசர் தனது மக்களுக்காகக் கடைசிவரையும் உழைத்தார்.
தலித் மக்கள் தங்கள் நிலையில் இருந்து மேலெழ வேண்டுமானால் அயோத்திதாசரின் சிந்தனைகளைத்தான் ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். மாற்றாக ஈவேரா போன்ற நிலவுடைமையிலிருந்து கிளர்ந்தெழுந்தவர்களை அல்ல. தந்தை என்பதற்கு நமது தமிழ்ச் சமூகத்தில் ஒரு வழிபாட்டு மரபு இருக்கிறது. அந்த பிம்பத்தைக் கொண்டுதான் ஈவேராவை விமர்சிக்க வேண்டாம் என்று பலர் வசைபாடுகிறார்கள். ஈவேராவின் மரணத்தின் பின்னர் அது மாபெரும் பிம்பமாக மிகையாகியுள்ளது.
அயோத்திதாசரும் பிராமணியத்தின் மீது கடும் கருத்துத் தாக்குதல்களை மேற்கொண்டவர்தான். ஆனால் தலித் மக்களது விடுதலை அல்லது எழுச்சி எவ்வாறு அமையவேண்டும் என்பதை வரலாற்றிலிருந்து நிரந்தரத் தீர்வாக முன்வைத்தார் தாசர். அவர் பௌத்தத்தைத் தழுவினார். ஈவேரா செய்த "பிராமண எதிர்ப்பு மட்டும்" என்பது அறிவுபூர்வமான ஒரு காரியமே இல்லை.
இதனை ஜெயமோகன் இப்படிச் சொல்வார்:
"தமிழில் ஈவேரா உருவாக்கிய சருகுவேலி உடைபட்டதும் சனாதன மதம் விஸ்வரூபம் கொண்டு வளர்ந்துள்ளது. இதை எவரும் இன்றைய தமிழ்ச் சூழலை அவதானித்தால் காணமுடியும்"
ஈவேராவா? அயோத்திதாசப் பண்டிதரா? உங்களுடைய சமதர்மச் சிந்தனையாளர் என்றால் எனது பதில் அயோத்திதாச பண்டிதர் தான்.
00

Comments

Popular Posts