இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வலுப்படுத்துதல்.

பொதுவாக நாம் திட்டமிட்ட சிங்கள-பௌத்த குடியேற்றங்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால் பேரினவாத நிழலில் நின்றுகொண்டு அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்கள் தொடர்ந்து தமிழ்ப் பகுதிகளில் நடைபெறுகிறது. இது பற்றி யாரும் பேசுவதில்லையே. ஏன்?. யாராவது ஒரே மொழி பேசும் ஒரே இனத்தவர்கள் நாம் என்று கூறினால் அதைச் சரியான முட்டாள்த்தனம் என்றுதான் கூறுவேன். அதனை எந்த ஒரு முஸ்லிமும் தமிழரும் ஏற்கப்போவதில்லை. இலங்கையில் இருப்பது மூன்று பிரதான இனங்களாகும். அதில் முஸ்லிம் இனமும் ஒன்று.
தமிழக முஸ்லிம்களின் அதிகார நிலைப்பாடுகளுடன் வைத்து இலங்கை முஸ்லிம் அதிகாரத் தளத்தைப் பார்ப்பவர்களே அதிகம். இலங்கையின் அதிக விழுக்காடு முஸ்லிம் அதிகார மையம் அடிப்படைவாத மதப் பரப்புகையை நோக்காகக் கொண்டது. நலிந்த இனத்தை நசுக்குவதைக் கடப்பாடாகக் கொண்டது.இலங்கையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் துணை அமைப்பான "சேவா பாரதி" என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு ஒன்று வடகிழக்கில் இயங்கிவருகிறது. இதற்கு அரச அனுசரணை பெருமளவில் உள்ளது. இதன் பிரதான பணி மதமாற்றங்களைத் தடுத்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியமைத்தலாகும்.

தமிழகத்தில் உள்ள சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன் மற்றும் பெரியாரிஸ்டுகளால் வெறுமனே இலங்கைத் தமிழர்களை உசிப்பிவிட்டு இந்த நாட்டில் பிரிவினைவாதத் தீயை மட்டுமே மூட்டமுடியும். அவர்கள் களப் போராளிகள் அல்ல.  அவர்களால் இந்த மக்களுக்குச் செய்ய முடிந்தது எதுவுமல்ல. வெறுமனே Youtube இல் வீடியோ போடுவதைத் தவிர. ஆனால் அங்கிருந்து கொண்டு RSS அமைப்பின் மீது மிக வன்மமான கருத்துக்களை இவர்கள் பரப்பி வருகின்றனர். அது அவர்களது நிலைப்பாடு. ஆனால் இலங்கைத் தமிழர்கள் சிலர் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு தமிழர்களுக்கு எதிரானது என்று பிழையாகக் கருதுகின்றனர். வழக்கம் போல தமிழக அரசியல் வாதிகளின் பிழையான பிரச்சாரம் மூலம் புரிந்து கொள்ளப்பட்ட மிகத்தவறான புரிதல்களில் இதுவும் ஒன்று. உண்மையில் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு இந்தியாவில் இல்லையென்றால் கிறிஸ்த்தவ மிஸனரிகளும் இஸ்லாமிய ஜமாத்துக்களும் மதமாற்ற மற்றும் நிலக்கவர்தல்களை வெளிப்படையாகவே செய்து வந்திருக்கும் என்பதே உண்மை.

என்னைப் பொறுத்த வரையில்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நன்கு கட்டமைக்கப்பட்ட உலகில் அதிக தொண்டர்படை கொண்ட இந்துச் சேவை அமைப்பு. இலங்கையில் இதன் சேவை மதமாற்றத்தைத் தடுத்து இந்துத் தமிழ்ச் சமூகத்தை நிறுவனமயப் படுத்துவதாகும். இதற்கான பணிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே ஆரம்பத்தில் இவர்கள் ஈடுபட்டனர். 
இதற்கு முழுமையான ஆதரவை வழங்குமாறும், ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் அடிப்படை பற்றிய புரிதலையும் தொடர்ந்து விளக்கியுள்ளோம். இலங்கையில் பிரிவினைவாதத்துக்குத் துணைபோகாத தமிழ்ச் சமூகத்தை வழிநடத்தக்கூடிய தகுதி ஆர்.எஸ்.எஸ்
அமைப்புக்கு உள்ளது.

பொதுவாகத் தமிழர்களை மாற்றுச் சமூகத்தவர்கள் குற்றவாளிகள் ஆக்குவதற்குப் பின்வரும் காரணத்தைத் தொடர்ந்து முன் வைத்துள்ளனர்.
புலிகள் முஸ்லிம்கள் மீது செய்த வன்முறையைக் கொண்டு ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களே குற்றவாளிகள் என்று வரையறுத்துத் தமிழர்களிடம் தாழ்வு மனச்சிக்கலைத் தோற்றுவித்தல். அதை நான் இப்படித்தான் புரிந்து, பிறரிடம் கேட்டறிந்து வைத்துள்ளேன்; இஸ்லாமிய ஜிகாதிய பயங்கரவாதிகள் கிழக்கில் தமிழர்கள் மீது ஆடிய ருத்ரத் தாண்டவத்துக்கான எதிர்வினைதான் புலிகள் வடக்கிலிருந்து  முஸ்லிம்களை உயிர்ச் சேதமின்றி  வெளியேற்றியது. இதற்கு எப்படித் தமிழர்களைத் தொடர்ந்து பொறுப்பாக்குவது. அது புலிகள் செய்த தவறு. வேண்டுமானால் இறந்த புலிகளைத் தட்டியெழுப்பிக் கேளுங்கள். புலிகளுக்காக மொத்தத் தமிழர்களும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லை. இந்த முஸ்லிம் வெளியேற்றம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அரசியல் செய்யப் போகிறார்கள். அவர்களை வெளியேற்றியதற்கு ஈடாகப் பலர் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சிறப்பாக வாழ்கின்றனர். இப்போது இங்கே அகதிகள் என்ற பேச்சுக்கு இடமில்லை.

ஆகவே, இங்கே நடைபெறும் சிங்களக் குடியேற்றங்களை எப்படி எதிர்க்கிறீர்களோ அதே போல இங்கு அதிகாரத்தின் துணையுடன் நடைபெறும் அத்துமீறிய முஸ்லிம் குடியேற்றங்களையும் தமிழர்கள் எதிர்க்க வேண்டும். இதற்கு நம்மிடையே நிறுவனமயப்பட்ட ஒரு தமிழ் அமைப்பின் தேவைப்பாடு அதிகமுள்ளது. அதற்குச் சரியான தேர்வுதான் ஆர்.எஸ்.எஸ்.
சரி, தமிழ்ப் பிரதேசங்களுக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வருகை எப்படி நிகழ்ந்தது. புலிகளின் 2009 அழிவுக்குப் பின்னர், அரசாங்கத்தைக் கடுமையாக எதிர்க்கவோ, ஆதரிக்கவோ தமிழர்களுக்குச் சரியான அதிகார மையம் இல்லை. அத்தருணத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முஸ்லிம் அரச அமைச்சர்கள் மிகுந்த சக்தி மிக்கவர்களாக இருந்தார்கள். அவர்கள் யுத்தத்துக்கு முன்னும் பின்னும் அரசாங்கத்துடன் இருந்தார்கள். அவர்களில் 90 விழுக்காடானவர்கள் முஸ்லிம் அடிப்படைவாதிகள். இவர்கள் தமது அதிகாரங்கொண்டு அதிகார வலுவிழந்த தமிழர்களின் நிலங்களைப் படிப்படியாகப் பறிக்கவும் அடையாள அழிப்புச் செய்யவும் ஆரம்பித்தனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரிலும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை பெற்றுத் தருகிறேன் என்ற பெயரிலும் தமிழர்களின் வாக்குகளை அவர்கள் கவரத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து செய்து வரத் தொடங்கினர். இதன் விளைவு தமிழ்ப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய முஸ்லிம் வர்த்தக நிலையங்களையும் குடியிருப்புகளையும் அமைக்கத் தொடங்கியுள்ளனர். இதனைத் தடுக்க அதிகாரம் அற்றவர்களாகத்தான் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் உள்ளனர்.
அவர்களால் ஏன் தடுக்க முடியவில்லை என்றால் அவர்கள் இன்னமும் நாடு கிடைக்கும் என்று வெளிநாட்டுப் பணத்துடன் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு கனவு  காண்கின்றனர். அதற்கு முன்பாகவே தமிழ்ப் பிரதேசங்களும் பண்பாட்டு மரபுகளும் இஸ்லாமிய மயமாகுவதை இவர்கள் கூர்ந்து கவனிக்கவில்லை.பலர் பலவிதமாக முற்போக்குப் பேசுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் 80 விழுக்காடு முஸ்லிம் அதிகார மையங்களின் நிலைப்பாடு என்பது இதுதான்;
"உலகம் முழுமைக்கும் இஸ்லாமிய மதத்தைப் பரப்ப வேண்டும். அதனை மார்க்கம் என்ற பெயரில் கௌரவப்படுத்தி வைத்திருக்க வேண்டும். அதற்கு வலுக்குறைந்த தேசிய இனங்களின் அடையாளங்களை அரசியல் அதிகாரம் கொண்டு அடையாள அழிப்புச் செய்ய வேண்டும். பிற்பாடு அந்தப் பிரதேசத்தில் பெரும்பான்மை அந்தஸ்த்தைப் பெற்று அவ்வினத்துடன் பேரம் பேசுவதைத் தொடங்க வேண்டும். மறுப்பவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்க வேண்டும். அவர்களைக் காபிர்கள் என்று வகைப்படுத்த வேண்டும்."
வெறுமனே வன்முறைக்காக ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பின் பரவலாக்கத்தை இங்கு நாம் விரும்பவில்லை. இங்கு நிகழும் தமிழ் அடையாள அழிப்புக்கு எதிர்வினையாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வந்து சேரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இந்த இஸ்லாமிய அடிப்படைவாதப் பரவலாக்கத்தை ஜெயமோகனின் ஒரு குறிப்புடன் முடித்துக் கொள்ளலாம்.
"இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும். அது ஈழமானாலும் சரி இந்தியாவானாலும் சரி பிரிட்டனானாலும் சரி. இதுவே நிதரிசன உண்மை. எத்தனை தலைமுறைக்காலம் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அந்த நாட்டாலேயே மேன்மை பெற்றிருந்தாலும் சரி , அந்த நாட்டை மதநோக்கில் அழிக்க அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்பதைக் கண்டுகொண்டிருக்கிறது ஐரோப்பா."

                        கிளிநொச்சியில் அத்துமீறிய குடியேற்றத்துக்காக முஸ்லிம் 
                  அமைச்சரின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்.

குறிப்பு: ஏற்கனவே முஸ்லிம்களின் குடியேற்றம் இருந்ததாகப் பொய்யான தரவுகளை இணைத்துப் பல தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு இஸ்லாமியமயம் செய்யப்படுகின்றது. இதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுடைய அரச இயந்திர அனுசரணையைத் தாராளமாகப் பாவிக்கின்றனர். இயன்றவரைக்கும் தமிழர்கள் வன்முறையைத் தவிர்த்து வருகிறார்கள். இதனைத் தீர்ப்பதற்கு அதுதான் வழி என்றால் மிகத் துன்பியல் சம்பவங்களாக உருமாறிப்போகலாம். 

தொடர்பிலுள்ள இஸ்லாமிய நண்பர்கள் பலருடன் இந்த அமைச்சர்களின் அட்டூழியங்கள் பலவற்றைச் சொல்லிப் பார்த்துள்ளேன். ஆனால் அவர்களால் ஏதும் பேச முடியவில்லை. முஸ்லிம் சமூகத்துக்கள் இருக்கும் அடிப்படைவாதங்கள் இவற்றைப் பேச மறுக்கின்றது. இந்தப் பதிவு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தை எடைபோடும் பதிவு அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உடலை வருத்தி உழைத்து முன்னேறிச் சக சமூகத்தை சக மனிதனாக மதிக்கும் எத்தனையோ இஸ்லாமியர்களை எனக்குத் தெரியும். இந்த இஸ்லாமிய அதிகார மையத்துக்கு எதிர்வினையாற்றவே இங்கு இந்துத் தேசியம் பிரயோகிக்கப்படுகிறது.
00

Comments

Popular Posts