பிரதேசத்தின் இலக்கியப் போலிகள்

பிரதேசத்தின் இலக்கியப் போலிகள்.
====
இலக்கியத்தைப் பேசுபவர்கள். இலக்கியத்தை எழுதுபவர்கள். இலக்கியத்தால் யோசிப்பவர்கள்.
இலக்கிய வாசகர்கள்.
இந்த நால்வருக்குள்ளும் ஒரு சமூகம் அடங்குகிறது. அல்லது அடங்கிய சமூகத்தை இலக்கியம் தன்வழி பெற்றுக்கொள்கிறது.
இந்த நான்கும் இடையறாத ஒரு பிணைப்பால் நம்மிடையே அருவமாகச் சூழ்ந்து இருக்கிறது. இதனைக் கண்டுபிடிக்க வழி "போலி-அசல்" பற்றிய மிகையற்ற தொடர்பாடலை எமக்குள் நீண்ட காலமாக நிகழ்த்துவது. எனது அனுபவத்தின் படி இலக்கியப் போலிகளையும், நிஜ இலக்கியங்களையும் அடையாளங்காண எனக்கு இரண்டு வருடங்கள் எடுத்துக்கொண்டது. இந்த இரண்டு வருடத்தில் நான் என்னைத்தவிர ஏனையவர்களை மதிக்காத உள்ளகங்கார வாசகனாக என்னுள் பொருத்திப் பார்த்திருக்கிறேன். அந்தத் தன்னகங்காரம் இலக்கிய வாசகனுக்கோ எழுத்தாளனுக்கோ இருக்க வேண்டிய ஒன்று. இதனூடாக எனக்குள் சுரக்கும் வன்மங்களை அட்டக்கத்தியாகவே நான் எனக்குள் பார்த்திருக்கிறேன். அல்லது அடக்கிக் கொண்டதுண்டு.

நமது பிரதேசத்தின் போலித்தனமான இலக்கியச் செயற்பாட்டாளர்களையும் போலி இலக்கியங்களையும் கருத்தியலாக மறுக்கவேண்டும். இது அதனைக் கொஞ்சம் அண்மித்த கருத்துப்பதிவு என்றே நினைக்கிறேன்.
00

வவுனியாவில் தமிழ் மாருதம் என்று ஒரு அரைவேக்காட்டு இலக்கிய-பண்பாட்டு மாமன்றம் ஒன்று இயங்கி வருகிறது. மிக மட்டமான, மேம்போக்கான இலக்கிய வாசிப்புக்களை மட்டுமே நம்பி இயங்கும் ஒரு இலக்கிய மையம்தான் இது. இங்குள்ள மேடைப் பேச்சுக்களுக்காகவே பலர் இதைக் படையெடுத்துச் செல்கின்றனர். இங்கு ஊட்டப்படும் மரபுக் கவிதைகளையும், உரத்த பேச்சுக்களையும் தரமான படைப்பென்று நம்பிப் பலர் இவர்களின் தலைமையுடன் ஒத்திசைகின்றனர். அல்லது இதுதான் இலக்கியம் என்று நம்புகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் இலக்கிய வளர்ச்சியை எடுத்தால் தொடர்ந்த ஒரு இலக்கியப் பாரம்பரியத்தையும், நவீன இலக்கிய உள்வாங்குதலையும் சமகாலம் வரையிலும் அவதானிக்கலாம். இதற்குப் பிரதான காரணம் அங்குள்ள மிகக் குறுகிய எண்ணிக்கை கொண்ட இளைஞர்கள் தமது இலக்கியப் பாரம்பரியத்தைத் தமது சுயவாசிப்பின் மூலமும், பழைய இலக்கியவாதிகளின் இலக்கியப் பழமைவாதத்தை விமர்சித்து முன்னகரும் திறமையும் கொண்டுள்ளதுதான்.
அது வவுனியாவில் எதிர்மாறானது. இங்குள்ள தமிழருவி, தமிழ்மணி, மயிர்மணி, கூந்தலருவி என்று சொல்லப்படுபவர்களின் துணையுடன் இதுதான் இலக்கியம் என்று இங்கு பரப்புகை செய்யப்படுகிறது. அவர்களின் இலக்கியத்தரம் என்னவென்று பார்த்தால் ஒரு சிறுகதையின் முடிவிலோ தொடக்கத்திலோ எங்குமோ தாய் இறப்பது போன்ற கருத்து வரக்கூடாது என்று நினைப்பவர்கள். ஏனென்றால் தாய் இறப்பது போன்று வந்தால் அது தனது தாய் இறப்பது போன்ற உணர்வை அவர்களுக்கு அளிக்கின்றதாம். என்னைப் பொறுத்தவரையில் இவர்களது இலக்கிய இடம் என்பது மிக மந்தமான எப்போதும் நவீன வாசிப்பை அண்மிக்காத மட்டரகமானது. இதன் தொடர்ந்தேச்சையான உருவாக்கம்தான் தமிழ் மாருதம்/ தமிழ் மன்றம். தமது இலக்கிய இடத்தையும், பகுத்தறிவையும் உயர்த்த நினைப்பவர்கள் இந்த Orthodox கோமாளிகளுடன் இணைந்து செயற்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

இலக்கிய வளர்ச்சியில்  வவுனியாவை  இலக்கிய விபச்சாரத்தின் மையம் என்று சமகாலத்தில் சொல்லமுடியும். இங்கு எந்த ஒருவராலும் தனது வாயை நம்பியும் தனது சந்த-தொடைப் பேச்சை நம்பியும் மட்டுமே இலக்கியம் நடத்த முடிகிறது என்பதை உறுதியாகக் கூறமுடியும். சிந்திப்பதற்கான நேரம் என்பது உங்கள் சந்தப் பேச்சுக்களில்தான் இருக்கிறது என்பதுதான் நமது பிரதேச வாசிப்புக்களின், எழுத்துக்களின் பரிதாபம்.

இந்த மன்றத்தின் உறுப்பினர்களிலோ  இயங்குபவர்களிலோ யாருக்கும் நவீன கவிஞர்கள், நவீன எழுத்தாளர்கள் பற்றிய எவ்வித அறிதலும், வாசிப்புப் புரிதலும் இல்லாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வயிரமுத்துவும் வாலியும்தான். நீங்கள் இதனை வவுனியாவின் இலக்கிய மையம் என்று பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. எதிர்காலத்தில் தீவிர வாசிப்பிலும் எழுத்திலும் வவுனியாவிலிருந்து சிலர் வரக்கூடும். அவர்களை உங்களது மாருதக் கிணற்றுக்குள் தள்ளித் தவளையாக்காதீர்கள். தமிழ் மாருதம் என்பது பகுத்தறிவற்ற மத நம்பிக்கைகளால் உந்தப்பட்ட சுயமாகச் சிந்திக்கும் யோக்கிதை இல்லாதவர்களுக்கான களச்செயற்பாட்டு நிலையம்.

00

வவுனியா தமிழ் மாருதம் என்ற பிரயோசனமற்ற இலக்கிய உபவாசத்தின் மீது எனக்கு ஏன் உடன்பாடு இல்லை என்பதைச் சிறிய கோட்பாட்டு உதாரணத்துடன் நிறுவுகிறேன். முடிந்தால் வாசியுங்கள். ஆதாரங்களுடன் வந்து உங்கள் கருத்துக்களால் நிராகரியுங்கள். இதன் தளம் பல கோணத்தில் விரியக்கூடியது.

வவுனியா தமிழ் மாமன்றம் என்கிற தமிழ் மாருதம் யார் கையில் இருக்கிறது என்று பார்த்தீர்களானால் தீவிர வாசிப்புக்கு உள்ளாகாத, இலக்கியத்தை ஒரு Entertainment ஆகப் பாவிக்கும் வங்கி முகாமையாளர்களிடமும், வைத்தியர்களிடமும், இதர புரொபஸனல் ஆட்களிடமும்தான் இருக்கிறது. இது ஒரு அந்தஸ்த்து ஈகோவைப் பாரம்பரியமாகப் பின்பற்றும் வழிமுறை. இதில் தவறில்லை. ஆனால் இலக்கியத்தை முழுநேரத் தொழிலாகக் கொண்ட தீவிர வாசிப்பாளர்களை இவர்கள் தமது அடிமைகளாகத்தான் பிரயோகிக்கிறார்கள் என்பது ஏற்கமுடியாததுதானே. அத்துடன் தமது இலக்கியத் தகுதிகளை உயர்த்தாமை இன்னொரு அசிங்கம். இதனை ஒரு வியாபரம் கலந்த அல்லது மேட்டுக்குடியினருக்கான (பொருளாதார அந்தஸ்தில் மட்டும். இலக்கியத்தில் அவர்கள் மக்குகள்தான்.) இலக்கிய- பண்பாட்டு உரையாடலாக ஆகிவருவதை ஒருவர் கூட மறுக்க மாட்டார்.

எவனாவது தஞ்சைப் பிரகாஷ் போல தாடி வைத்துக்கொண்டு உள்நுழைந்தால் மோசமாகப் பார்க்கும் இப்படியான Orthodox மையங்களைத் தகர்த்தாகவேண்டிய கட்டாயம் சகலரிடமும் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலு என்ன பெருமை இருக்கப் போகிறது.

கீழே தரப்போகும் இதற்கான ஒப்பீடு இவர்கள் தகுதியுடன் ஒப்பிடுகையில் மிகையானதுதான். என்றாலும் சொல்கிறேன். 1967இல் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகளின் கொள்கைகளால் தமிழகப் பிராமணர்கள் தமிழகத்தை விட்டு ஏனைய இந்திய மாநிலங்களுக்கு வெளியேறினர். காரணம் தமிழ்நாட்டில் அவர்கள் மீதான புறக்கணிப்பு. இதனால் அவர்கள் வெளி மாநிலங்களில் சென்று ஆங்கில மற்றும் அம்மாநில மொழிகளைக் கற்றுத் தமிழரை ஒரு காட்டுமிராண்டிகள் என்று சொல்லத் தொடங்கினர். அவர்கள்  ஆங்கிலம் கற்றவர்கள் என்பதனால் பல மாநிலவத்தவர்கள் நம்பத்தொடங்கினர். அதே நேரம் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் வெள்ளாளர், வன்னியர், நாடார், தேவர் என்ற மேலாண்மைத் தளத்தில் நின்றுகொண்டு தலித்துக்கள்மீது அருவமான சாதிய அடக்குமுறைகளைச் செய்யத் தொடங்கினர். அத்துடன் மேலாண்மையான சாதிகளுக்குள்ளும் இந்தப் பூசல் இருந்தது. இதன் விளைவு, அநேகமான தமிழ்ப் பிராமணர்களும், தலித்துக்களும் "தமிழர்" என்கிற அடையாளத்தில் இருந்து ஒதுங்கத் தொடங்கிவிட்டனர். ஒதுங்கியபடியுள்ளனர். அவர்கள் தமக்கான தனிச்சாதியமாக உருக்கொண்டுள்ளனர். அதுவாக விரும்புகின்றனர். இதற்கு மூல காரணம் பிற்காலத் திராவிடத்தின் நிலவுடைமை சார்ந்த அதிகாரத் தவறுகள்தான்.

இதனை எப்படி வவுனியாவின் இலக்கிய அரவேக்காடுகளுடன் ஒப்பிடமுடியும் என்று நீங்கள் கருதலாம். ஒன்றை அறுதியிட்டு நிறுவுவதற்குக் கோட்பாடு மூலம்தான் தகர்க்க முடியும் என்பது நம்பிக்கை. இங்கு கடினக் கோட்பாடுகள் எதுவும் நான் கூறவில்லை. வெறுமனே திராவிட மேலாதிக்கத்தின் அருவமான விடயங்களை இந்தத் தமிழ் மாருதக் கோமாளிகளுடன் நிறுத்தி அவர்கள் இலக்கியத்தின் மையம் இல்லை என்பதைக் கூறலாம்.

இங்கு பொருளாதார ரீதியில் மேலோங்கியவர்கள், அதேநேரம் வாசிப்பதற்கே நேரமற்றுத் திரியும் இந்த பிஸி புரொபஸனல்கள் எப்படித் தம்மை வவுனியாவின் இலக்கிய மையமாக வலிந்து நிறுத்தமுடியும். ஒரு கௌரவ மயிருக்காக இவர்களையெல்லாம் இலக்கியப் பீதாம்பரங்களாக ஏற்பதற்கு இவர்களுடைய தகுதி என்ன?. வெறும் வைத்தியர்கள். வங்கியாளர்கள் என்பதுதான்.
இந்த மயிருக்காகத்தான் கூட்டம் கூடி மரபானவற்றை இவர்கள் உபதேசித்து வவுனியா இலக்கிய மாண்பை மேலுயர விடாமல் தடுக்கிறார்கள் என்பது எனது கடுமையான விவாதம். இவர்களது அமைப்பைத் தகர்ப்பதற்கு இவர்களது அந்தஸ்த்து மயிரை விட்டு வரமாட்டோம், இவர்களுடன்தான் இலக்கியம் பேசிக்கூடிக் குலாவுவோம் என்று நினைப்பவர்கள் இன்னும் பத்து வருடம் சென்றாலும் அந்தஸ்த்து மட்டுமே போதும் என்ற இருண்மையில் மூழ்குவதை யார் தடுக்கமுடியும்.

பி.கு: யாழ்ப்பாணம், கொழும்பு, திருமலை முதலிய இடங்களிலிருந்து தொடர்புகொள்ளும் நண்பர்கள் முதலில் கேட்பது உங்களது மாவட்டத்தில் இலக்கியச் செயற்பாட்டிற்கு தமிழ் மன்றத்தை விட உருப்படியானவை வேறில்லையா என்பதுதான்.  அவர்கள் நினைப்பதில் தவறில்லை. இந்த மாதிரிச் சமூக அந்தஸ்த்து பரதேசிகள் இலக்கியம் பேசி சமூகத்தில் கௌரவம் தேடுவதற்காக இலக்கியத்துக்காத் தம்மை அர்ப்பணித்தவர்களைப் புறக்கணித்தால் நிலைமை இதுதான்.  மேலும் தமிழ் மாருதம்/மன்றம் வவுனியாவின் இலக்கிய மையம் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். அது இன்னும் வவுனியாவில் உருவாகவில்லை. விரைவில் அதற்கான பணிகள் ஆரம்பமாகும். அதற்கான செயற்பாட்டாளர்கள் தாமதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கின்றனர். அது நிச்சயமாக நூறு பேரைக்கொண்ட உறுப்பினர்களாக இருக்காது. வெறும் பத்தாகவும் இருக்கலாம்.  இப்போது  இருக்கும் தமிழ் மாருதம் என்பது சமூக கௌரவத்துக்காக இலக்கியம் பேசும் ஒரு இலக்கிய விபச்சார மையம். நல்லிலக்கியத்தை நேசிப்பவன் இதனுடன் இணைந்து எக்காலத்திலும் செயற்படமாட்டான்.
00

Comments

Popular Posts