சிதம்பர நினைவுகள்.


லோகத்துல அவரவர் சந்தித்ததும் சந்தித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் வகையிது.
1. பாரதியார் வகை.
2. பிரமிள் வகை.
3. நகுலன் வகை.
4. ஒட்டக்கூத்தர் வகை.

பிரமிள் வகையினரைப் புரிந்து கொள்ள சற்றேனும் நாளிதழ்களில் வெளிநாட்டுச் செய்தியில் வருகின்ற பகுதிகளையாவது ஓரளவுக்குப் படித்தறிந்திருக்க வேண்டும்.  இல்லையெனில் அவர்கள் சொல்லவரும் கருத்துக்களையும், கோட்பாடுகளையும் புரிந்துகொள்வது எளிதாகவிராது. சதா வெளியூரின் Operation Entebe யையும், உள்ளூரின் Operation Pawan ஐயும் போட்டுக் குழப்பியடித்துக்கொண்டிருப்பர்.

நகுலன் வகையினர் தனிமைப் பிரியர்களாகவும், சுருங்கக் கதைப்போராகவும் இருந்துவிடுவர். சமயத்தில் இந்தச் சுருக்கத்தினால் உங்களை யாரென்றும் கேட்டுவிடக்கூடிய பேர்வழி. நீங்களெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கும் சமூகச் "சைக்கோக்கள்" இவர்கள்தான். "எனக்கு யாருமில்லை நான்கூட" என்று Oneway கதைகளை கதைத்தபடி இருப்பர்.

ஒட்டக்கூத்தர் வகையினர் எப்போதும் மற்றவரைக் குறை கூறிக்கொண்டும், தூஷணங்களைக் கூட மிக அழகாகக் கவித்துவமாகக் கூறக் கூடியவர்கள்/ கூறியபடியிருப்பர். இவ்வகையினரை நாங்கள் பாடசாலையிலும், விடலைப் பருவத்திலும் கண்டிருப்போம். இவ்வகையிலிருந்தும் நாம் தெளிந்து வந்திருப்போம். (சிந்தித்தால் ஒட்டக்கூத்தர் வகையினராக நாமிருந்த காலம் ஞாபகம் வரும்)

இருப்பதிலேயே மிக மிக ஆபத்தானவர்கள் பாரதியார் வகையினரே. ஏனென்றால் அவர்கள் கூறுகின்ற அறிவுரைகளில் நிறைய அனுபவக் களிம்புகளும், புதுமையின் அலைகளும் நிச்சயமாகவே இருக்கும். பாஸிசம் போலவும் இருக்கும், ஆனால் தனியறையில் சென்று யோசித்தால் 'அடடே அது சரிதான்' என்ற பிரக்ஞை வந்துவிடும். இருந்தாலும் ஆபத்துப் பேர்வழிகள்.

இவற்றை விட ஒரு வகை இருக்கு, சுள்ளிக்காடு பாலச்சந்திரன் வகை. இந்த வகையில் இருப்பது ஏதோ ஒருவிதத்தில் சித்தவினிமை கிடைக்கத்தான் செய்கிறது. அதில் சிதம்பர நினைவுகள் ஏகபோகமாக நிகழும். இந்தவகையினன் தான் நான் என்பதில் எத்தனை அடுப்படிச் செருப்படிகளின் ஞாபகங்கள்.....

Comments

Popular Posts