வருகை
அவளின் வருகை பார்த்து தாழ்வாரத்தின் மழை நீரொழுகும் மிகக் குளிர்ந்த மண்ணில், ஒரு தென்னோலையால் அவள்பெயரை எழுதிக்கொண்டிருந்தான் அவன்.
நெருடலான மனதுக்கு மட்டுமே தெரிந்த எப்போதோ கேட்ட சில பாடல்களை தூரத்து அலைவரிசைகள் ஒலிபரப்பிக்கொண்டிருந்தன. அத்தருணத்தில் வேறு என்ன செய்வது என்ற பிரக்ஞை ஏதுமற்று இருந்த அவனது மொழிக்கு மட்டும்தான் தெரியும், அந்தத் தாழ்வாரத்தில் மழைபெய்து பல ஆண்டுகள் ஆனதென்றும், அலைவரிசைகள் செயலிழந்து சில மாதங்கள் கழிந்ததென்றும்......
Comments
Post a Comment