சபிக்கப்பட்டவர்கள்
நகர்ந்துசெல்லும் மனிதர்களுக்கென
ஒரு மொழியைச் சேகரித்து வைத்துள்ளான் அச்சிறுவன்.
அது ஏதிலிகளின் மொழியுமல்ல. சுதேசிகளின் மொழியுமல்ல.
அதனை,
பாலைமணலில் கால்பெருவிரலின் நகம் கழன்று ரத்தம் பெருகும் 'நீர்மொழி' என்றோ,
பெருகிய ரத்தத்தின் நதி, கரையலைகளில் நுரையாகப் பெருகும் 'குருதிமொழி' என்றோ கருதலாம்.
ஆனாலும்,
அச்சிறுவன் சேகரித்த மொழி;
நகரும் வேளையில் எல்லாம்,
மனிதர்கள் உயிரற்ற தேசத்தின் காவலர்களாக நிற்கலாயினர்....
Comments
Post a Comment