பிடித்த கவிஞர்


உங்களுக்குப் பிடிச்ச கவிஞர்கள் யாரென்று ஒருத்தர் கேட்கும் போது, நான் ஒரு லிஸ்ட் போட்டன். நகுலன், சுந்தரரராமசாமி, ரமேஷ்-பிரேம், கலாப்ரியா, தேவதச்சன், பிரமிள், மனுஷ்யபுத்திரன், தேவதேவன், ஞானக்கூத்தன், சுகுமாரன் யூமாவாசுகி, நரன், மோகனரங்கன், சேரன், எம்.யுவன், கல்யாண்ஜி, ஆத்மாநாம் என்று பூரணமாகாத ஒரு தொகுதியை அறிமுகஞ்செய்தேன்.

அதற்கு அவரது பதில் மிகச் சிறப்பாக இருந்தது. இவர்களில் ஒருவருடைய கவிதையையும் நான் வாசித்திருக்கவில்லை. ஏன் உங்கள் ரசனை மேம்படவில்லையா?. இந்த வைரமுத்து, வாலி, பா.விஜய் கவிதைகளையும் படிச்சுப் பாருங்கள் என்று ஏளனமாகக் கூறிச்சென்றார், அந்த "வெகுசன" மாந்தர்.
என் மனதுக்குள்ள இருந்த ஒரே பதில் ""நான் இவர்களையெல்லாம் வாசிப்பதை நிறுத்திக் கடந்து வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது"" என்பதுதான்.....

மனிதர்களுடன் பேசுவதை நிறுத்திப் பலகாலம் ஆகிவிட்டது, மனிதர்களைக் கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறேன். என்று ஒரு பெருங்கவிஞர் சொன்ன கருத்துத்தான் இப்போது ஞாபகம் வருகிறது. 'வாம்மா துரையம்மா' பாட்டுல கொச்சின் ஹனிபா சொல்ற வசனம் ஒன்டு வரும் "அது யாருன்னு சொன்னா புரியுமா?"  ("Old Poets Written Gold Lines") அதுதான் இதுபோன்றவர்களின் கேள்விகளுக்கான நம்நிலை........

Comments