விநாயகர்

திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ப் பிரிவினைவாதிகளை இன்னமும் இந்தியா போன்ற இறையாண்மை மிக்க ஒரு தேசம் உயிருடன் வைத்திருப்பதில் அல்லது வீதிகளில் சுதந்திரமாக நடமாட விட்டதில் இருந்து அந்த நாட்டின் ஜனநாயகம் எத்துணை கண்ணியமானது என்று அறிந்துகொள்ள முடிகிறது.  பச்சையான திரிபுவாதியாகவும் மேற்குலகில் செயற்படும் தமிழ்ப் பயங்கரவாத மற்றும் மதமாற்ற இயக்கங்களின் பணத்தில் கீழைத்தேசங்களில் குறிப்பாக தமிழ் இளையோரின் மனங்களில் பிரிவினையை வளர்ப்பதிலும் சீமானுக்கு அடுத்து முக்கிய பங்கு வகிப்பது திருமுருகன் காந்திதான். இந்த அபாயம் இலங்கை வரையும் பரவிக்கொண்டு செல்கிறது.

திருமுருகன் காந்தி சென்ற வருடம் வங்கக் கடலைத் தமிழர்கடல் என்றும், தமிழீழம் அடையாமல் தாங்கள் ஓய்வதில்லை என்றும் கற்பனைகளை அளந்து விட்டார். இந்த வருடம் கூறுகிறார் விநாயகர் தமிழர்களின் கடவுள் இல்லை என்று. இந்த விவாதம் திராவிடக் கட்சிகளால் பரப்பி வளரவிடப்பட்ட ஒரு போலியான விவாதமாகும்.

இவற்றை நிராகரிக்கப் போதுமான ஆதாரங்களைக் காலந்தோறும் தமிழ் இலக்கிய நூல்கள் நமக்களித்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில், சற்று பிற்பட்டதும் முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதுமான திருமுருகாற்றுப்படை என்ற  செய்யுள் இலக்கியத்தில் விநாயகர் பற்றிய குறிப்புகள் பின்வருமாறு இடம்பெற்றுள்ளன.

"முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்"

இதில் இடம்பெறும் 'ஒருகைமுகன்' குறிப்பது விநாயகரைத்தான். இந்தக் குறிப்பு இன்று நேற்று அல்ல இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பாக சொல்லப்பட்டு வந்த ஆற்றுப்படை இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. 

அத்துடன் நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியைத் தமிழுக்கு அளித்த மஹாகவி பாரதியார் "விநாயகர் நான்மணிமாலை" என்று மரபுக் கவிதைகளால் ஆன நீண்ட செய்யுளையும் விநாயகருக்காகப் படைத்துள்ளார். அதில் "உன் மலரடிக்குத் தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே" என்று மிக உருக்கமான நீண்ட காலம் பயின்று வந்த தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக விநாயகரை விழித்துப் பாடியிருப்பார். 

இவ்வாறு காலந்தோறும் கலந்து வரும் விநாயகர் வழிபாட்டை இந்துத்துவ வழிபாடு என்று சித்தரித்து மாற்று மத உரிமைகள் பேசி இந்து மதத்தைக் களங்கப்படுத்தும் பணிகளையே திருமுருகன், சீமான் போன்றவர்கள் மேற்கொள்கிறார்கள். இவர்களது கோட்பாடு தமிழ்ப் பண்பாட்டின் மூல வேரில் இந்து மதம் இருக்கக் கூடாது. இந்து மதம் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை என்ற தெளிவு தமிழர்களுக்கு ஏற்படும்போது அது இந்து மத அரசியலாகத் தென்னகத்தில் வியாபித்துவிடும். அப்படியான தருணங்களில் தமிழ் என்ற பெயரைச் சொல்லி அரசியல் செய்யமுடியாது. தமிழர் நிலங்களைச் சுடுகாடு ஆக்க முடியாது. ஆகவே வட இந்தியா, ஆரியர், பிராமணர், வந்தேறி போன்ற வெறுப்புக்களைத் தமிழர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதற்குத் தமிழ்- தமிழீழம் என்ற ஆயுதங்கள் தேவையாக உள்ளன. இவற்றை மேற்கொள்ள மதமாற்ற அமைப்புக்களின் உதவி தாராளமாக வழங்கப்படுகிறது. அத்துடன் மனித உரிமை என்ற பெயரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளகக் குழப்பங்களை இலங்கை-இந்தியா போன்ற தேசங்களில் தமிழர் பரந்துள்ள இடங்களில் பரப்ப வேண்டும். ஏனென்றால் தமிழர்கள் உலகின் மூத்தகுடி என்ற வெத்துவேட்டுத் தந்திரம் அத்திவாரமாக பன்நெடுங்காலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது சாதிப்பெருமை போல, சுயநலம் போல ஒளிந்திருந்து வெளிப்படுவதல்ல. எப்போதும் உள்ளுக்குள் வெறியாகப் புகைந்துகொண்டு எரிவது. அதனை எரிக்கத் திருமுருகன் காந்திகள் தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். இதற்காகப் பொது எதிரியை சித்தரிக்க வேண்டும். அதனை இந்துத்துவம் என்று அவர்களே அறிவித்துக் கொண்டுள்ளனர்.

இது விநாயகர் நான்மணிமலையில் பாரதி கூறியது.

"புகழ்வோம் கணபதியின் பொற்கழலை நாளும் திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே இகழ்வோமே புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம் ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்"

"இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்" இதனைத் திருமுருகன் காந்தி போன்ற தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்குப் பாரதி கூறிய இந்த ஒரு வசனமே இப்போதைக்குப் போதுமானதாக உள்ளது.

00

Comments

Popular Posts