துருவங்கள் பதினாறு

துருவங்கள் 16 எனும் "பூமரங்"- D16
======
ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா இந்த இரண்டு கிரைம் (Genre) திரைப்படங்களுக்குப் பிறகு மிகவும் கவனத்தை ஈர்த்த படம் துருவங்கள் பதினாறு என்றே கூறவேண்டும். கிரைம் படத்துக்கான அடிப்படைத் தேவைகள் பின்வருமாறு அமையும். (சில விதிவிலக்கு)
1. அங்கலாய்க்க விடாத கதையுக்தி.
2. பின்னணி இசை.
3. முக்கிய கதாபாத்திரம் ஒன்றின் அபரிமிதமான நடிப்பு/ மிகையற்ற நடிப்பு.
4. அறிவார்ந்த தொழிநுட்பங்கள்.
5. சிந்திக்கத் தோன்றும் முடிவு.

துருவம் என்பது "ஒரு கோளின்
சுழலச்சின் இரு முனைகள்" என்று கருத்து. வட, தென் துருவங்களைத் தான் அநேகமாகப் பிரதான கருத்தில் கொள்வதுண்டு. இங்கும் அப்படித்தான் இருவர் பிரதான இடம் பெற, ஏனைய பதின்நான்கு பேரும் ஓரளவுக்கு கதையுடன் தொடர்புற்றே நகர்கின்றனர். ஆனால் அந்த ஓரளவு முன் சொன்ற இருவரின் பங்கின் பாதி என்றும் கருதலாம்.  குற்றம் எனும் அச்சில் சுழலும் பதின்நான்கு பேரின் துருவமும் உவமித்து "துருவங்கள் பதினாறு" உருவாகியுள்ளது.

"Life can be Unpredictable" இந்த வசனம் திரைப்படத்தின் ஓரிடத்தில் இடம்பெற்றுள்ளது.  அதனையே அதன் முடிவு வரையிலும் சாதித்துள்ளார் இளம் இயக்குநர் கார்த்திக்.  இந்துத்துவத்தில் வரும் கர்மா பற்றிய கருத்து, அதாவது "செய்தது திரும்ப வரும்" என்ற பூமரங் பற்றிய குறியீடுடன் படம் நிறைவுறுகிறது.

இத்திரைப்படத்தின் பாராட்டுக்குரிய விடயங்கள்.
1. ரஹ்மானின் அபரிமிதமான நடிப்பு.
2. பின்னணி இசை/ OST.
3. தொய்வில்லாத திரைக்கதை.
4. திரைப்பட உருவாக்கம்/Making.
5. Slang Expressions/ பேச்சுவழக்கு வெளிப்பாடுகள் மற்றும் சித்தரிப்புகள்.
6. நேர்த்திமிக்க ஒளிப்பதிவு.
7. நீண்டுவிடாத திரைப்படத்தின் நேர அமைவு/ Running Time.
8. பாடல்கள் இல்லாத இன்னொரு குருதிப்புனல்.

போன்ற விடயங்கள் மிக முக்கியமாகத் திரைப்படத்தைக் கவனிக்க வைக்கின்றது. அதை விட படத்தின் இயக்குநர் புதுமுகம் என்பது பாராட்டுக்குரியது. துருவங்கள் பதினாறு என்பது எறிய மீண்டவரும் "பூமரங்" குகள்  பற்றிய நேர்த்தியான கதை என்றே சொல்லவேண்டும்.

குறிப்பு: Tamilrockers இன் மூலப்பிரதிக்கு நன்றிகள்.

சுயாந்தன்.

Comments

Popular Posts