வீடு

வீடு.
கண்ணாடி.
வீட்டுக்குருவி.
துணைக்குருவி நெடுநேரம் வீட்டில் இல்லை.

கண்ணாடியில் தன் பிம்பம் கண்டு கண்ணாடியின் பிம்பத்தைக் கொத்துகிறது. வெகுநேரமாக விளங்கவில்லை. பின்பு யோசித்தால் புரிந்தது துணைக்குருவிக்குத் துணைவியாகத் தன்னைப்போல ஒரு குருவி தன் இருப்பிடம் வந்துவிட்டது. அதனால் கலவரமடைந்த பெண்குருவி தனது பிம்பத்தையே கண்ணாடியில் கொத்தி வெறுப்பை வெளிக்காட்டுகிறது. நெடுநேரம் கொத்தி அதன் அலகுகள் V வடிவாகிக் கண்ணாடியின் பிம்பப் படிவங்கள் அழிந்தும் விட்டன. எனினும் ஆண்குருவி வெளிச்சென்றதும் அழிந்த கண்ணாடியின் முன்சென்று பறந்து பார்க்கும் அக்குருவி. கள்ளக்காதலி இல்லையென்றதும் அருகிலுள்ள கூடுதிரும்பும்.

இதனை அவதானித்தபடி இருந்த அவன் "ஆகா!! என்னே ஒரு கற்பு முறை" என்று தன்னைத் தானே காறித்துப்பிவிட்டு ஒரு A படம் பார்க்கக் கணனியின் முன் குந்தினான்...

Comments

Popular Posts