காடு நாவல்: ஒரு வாசிப்பு.
நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் காதலிக்கும் மலைவாழ் பெண்ணாகிய நீலியும் இந்நாவலில் அழியாத சித்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஜெயமோகன் பல இடங்கள் அலைந்து திரிந்து தனக்குள் ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் என்றே கூறமுடியும். சங்க இலக்கியங்களும் அவ்விலக்கியங்களின் தலையாய கவிஞரான கபிலரின் காதல் இயற்கை ஒப்பீட்டுப் பாடல்களும் நாவலை மேலும் செழுமையடையச் செய்துள்ளது. குட்டப்பன் கதாபாத்திரம் தன் மத மரபுகளின் மீது நம்பிக